காசில்லாத நேரம் பார்த்து செலவு வைக்கும் பைக்.. அதை தவிர்க்க என்ன செய்யணும்? பைக்கை பராமரிக்க 8 டிப்ஸ் இதோ!
இருசக்கர வாகனங்களை பொறுத்தவரை அதற்கு போடப்படும் என்ஜின் ஆயில் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதை குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு ஒரு முறையாவது சோதித்துக்கொள்வது மிகவும் நல்லது. அல்லது அது என்ஜின் கோளாறு போன்ற பெரிய பிரச்சனைகளை கொண்டு வர வாய்ப்பு உள்ளது.
பிரேக்
இருசக்கர வாகனங்களை அதிக அளவில் பயன்படுத்தும் பொழுது அதில் பெரிய அளவில் தேய்மானம் ஏற்படும் விஷயங்களில் ஒன்றுதான் பிரேக். அதேபோல ஒரு இருசக்கர வாகனத்தில் எந்தவித சூழ்நிலையிலும் அலட்சியம் காட்டாமல் இருக்க வேண்டிய ஒன்று தான் பிரேக். ஆகையால் அவற்றையும் அவ்வப்பொழுது சரி பார்த்துக் கொள்வது மிக மிக நல்லது.
டயர்கள்
இருசக்கர வாகனங்களை பொறுத்தவரை பெரிய அளவில் திடீர் செலவுகளை இழுத்து விடும் ஒரு விஷயம் தான் இந்த டயர்கள். ஆகையால் இரு டயர்களையும் அவ்வப்பொழுது சரியாக பராமரிக்க வேண்டும். எரிபொருள் நிரப்ப பங்குகளுக்கு செல்லும் பொழுதெல்லாம் டயர்களில் காற்றின் அளவை சரிபார்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
ஏர் பில்டர்
இருசக்கர வாகனங்களை தினமும் பல கிலோமீட்டர் பயன்படுத்துபவர்களுக்கு இதனுடைய முக்கியத்துவம் பெரிய அளவில் தெரியும். பைக்கை அடிக்கடி பயன்படுத்துவதால் அதன் உள்ளே மாசு ஏற்பட்டிருக்கும், காற்று வழியாக ஏற்படக்கூடிய மாசுகளை வடிகட்டுவது தான் இதனுடைய வேலை. ஆகவே அதையும் நாம் சுத்தம் செய்து பராமரித்துக்கொள்ள வேண்டும்.
கிளட்ச்
கியர்களைக் கொண்டு இயங்கும் இரு சக்கர வாகனங்களில் கிளட்ச் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆனால் பலர் கியர் மற்றும்பொழுது சில நேரங்களில் கிளட்ச் பயன்படுத்தாமல் அதை செய்வதனால் கியர் பாக்ஸில் பெரிய அளவில் பிரச்சினை ஏற்படும், ஆகவே இருசக்கர வாகனங்களை பயன்படுத்தும் அனைவரும் கிளட்ச்சை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.
பேட்டரி
இப்பொழுது விலை மலிவாக கிடைக்கிறது என்றாலும் கூட நமது வண்டியில் செப் ஸ்டார்ட் தொடங்கி அனைத்து விஷயங்களுக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக மாறியுள்ளது பேட்டரிகள். பெரிய அளவில் செலவினை குறைக்க இவற்றை அடிக்கடி பராமரித்துக் கொள்வது நல்லது.
செயின்
வண்டிகளினுடைய இரு சக்கரங்களும் இயங்குவதற்கு முக்கிய பொருளாக திகழ்வது இந்த செயின்கள். ஆகவே இந்த செயினை ஆயில் மற்றும் கிரீஸ்களை பயன்படுத்தி நல்ல முறையில் பராமரித்து வந்தால் அதனுடைய ஆயுட்காலம் அதிகரிக்கும்.