சிவகார்த்திகேயன் 23.. மிருணால் தாகூருக்கு “நோ” சொன்னது ஏன்? வெளிப்படையாக உண்மையை சொன்ன இயக்குனர் முருகதாஸ்!
ரசிகர்கள் மனதை கவர்ந்து தற்பொழுது தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக மாறியிருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் அவர்கள் இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று இந்த திரைப்படத்திற்கான பூஜை நடைபெற்றதோடு இன்று முதல் அப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் துவங்குகின்றது.
ராக் ஸ்டார் அனிருத் இசையில் உருவாகும் இந்த திரைப்படத்தில் பிரபல நடிகை ருக்மணி வசந்த் கதையின் நாயகியாக நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்திற்காக பிரத்தியேகமான பயிற்சிகளை சிவகார்த்திகேயன் மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முதலில் இந்த திரைப்படத்தில் நாயகியாக நடிக்க தேர்வானது பிரபல நடிகை மிருணால் தாகூர் என்பது பலர் அறிந்த உண்மை.
இந்நிலையில் மிருணாலுக்கு பதிலாக, ருக்மணி வசந்த்தை படத்தில் நடிக்க வைப்பதற்கான காரணத்தையும் தற்போது வெளியிட்டு இருக்கிறார் முருகதாஸ் அவர்கள். அவர் ஒரு பிரபல நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தன்னுடைய கதைக்கு மிகவும் இயல்பான முக அம்சம் கொண்ட ஒரு பெண் தேவைப்பட்டதாகும், ஏற்கனவே ருக்மணியின் சில திரைப்படங்களை தான் பார்த்திருப்பதால், அவர் இந்த திரைப்படத்திற்கு பொருந்துவார் என்று நினைத்ததாலேயே அவரை இந்த திரைப்படத்தில் இணைத்ததாக கூறியுள்ளார்.