உலக டெஸ்ட் புள்ளிப்பட்டியல் – கடும் சிக்கலில் இந்திய அணி.. ஆப்பு வைத்த நியூசிலாந்து.. நம்பர் 1 யார்?
2023 – 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் புள்ளிப் பட்டியலில் நியூசிலாந்து முதல் இடத்தில் உள்ளது.
இந்திய அணியால் பிடிக்க முடியாத தூரத்திற்கு சென்று விட்டது நியூசிலாந்து அணி. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணிக்கு பின்னடைவாக மாறி உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகின்றன. அதில் ஆடும் ஒட்டுமொத்த போட்டிகளில் பெறும் வெற்றி, தோல்வி அடிப்படையில் வெற்றி சதவீதம் கணக்கிடப்பட்டு புள்ளிப் பட்டியலில் அந்த அணிகள் வரிசைப்படுத்தப்படுகின்றன.
அந்த வகையில் நியூசிலாந்து அணி சமீபத்தில் நடந்த தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரின் இரண்டு போட்டிகளையும் வென்றுள்ளது. அதற்கு முன் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் மொத்தம் நான்கு போட்டிகளில் மூன்று வெற்றிகள் பெற்று 75 சதவீத வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலிய அணி உள்ளது அந்த அணி 10 போட்டிகளில் 6 வெற்றிகள், 3 தோல்விகள், 1 டிரா செய்து 55 சதவீத வெற்றியுடன் உள்ளது. மூன்றாவது இடத்தில் இந்திய அணி உள்ளது. 6 போட்டிகளில் 3 வெற்றிகள், 2 தோல்விகள், 1 டிரா செய்து 52.77 சதவீத வெற்றியுடன் உள்ளது இந்திய அணி.
தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் வென்றாலும் கூட புள்ளிப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியை மட்டுமே இந்திய அணியால் முந்த முடியும். முதல் இடத்துக்கு செல்வது கடினம் ஆகியுள்ளது. நியூசிலாந்து இனி ஆடும் டெஸ்ட் போட்டிகளில் சில தோல்விகளை சந்தித்தால் மட்டுமே இந்திய அணியால் நியூசிலாந்து அணியை வரும் காலத்தில் முந்தி முதல் இடத்துக்கு செல்ல முடியும்.