அந்த விஷயத்தில் அதிகம் ஆர்வம் காட்டும் சாய் பல்லவி?
நடிகை சாய் பல்லவி மலையாள சினிமா மட்டுமின்றி தற்போது எல்லா மொழிகளிலும் கலக்கி கொண்டு இருக்கிறார். குறிப்பாக தெலுங்கில் நாக சைத்னயாவுக்கு ஜோடியாக தண்டேல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். சமீபத்தில் கூட படத்தில் இருந்து போஸ்டர்கள் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பும் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிப்பு, நடனம், பாட்டு தவிர சாய் பல்லவிக்கு படங்களை இயக்கவும் ஆர்வம் இருக்கிறது. நடித்து கொண்டே படிப்பிலும் கவனம் செலுத்திய அவர் டாக்டர் பட்டம் பெற்றார். இருப்பினும் கிளினிக் எதுவும் தொடங்காமல், தொடர்ந்து நடிப்பில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
தண்டேல் படத்தின் படப்பிடிப்பு இடைவேளையில் ஒளிப்பதிவாளரின் அனுமதியுடன் கேமராவை இயக்குவது, இயக்குனரிடம் காட்சி பற்றி விவாதம் செய்வது என்று, தனது டைரக் ஷன் ஆர்வத்தை சாய் பல்லவி வெளிப்படுத்தி வருகிறாராம். அப்படியே பெரிய பெரிய இயக்குனர்களிடம் பணியாற்றும் போது அவர்களிடம் இருந்து இயக்கத்திற்கான விஷயங்களையும் கற்றுக்கொண்டு வருகிறாராம்.
எனவே, விரைவில் சாய் பல்லவி ஒரு படத்தை இயக்கினால் கூட அதில் ஆச்சரியபடுவதற்கு ஒன்னும் இல்லை. மேலும், நடிகை சாய் பல்லவி தமிழிலும் களமிறங்கி உள்ளார். அதன்படி, இயக்குனர் ராஜ் குமார் பெரிய சாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் SK21-திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பும் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.