விக்னேஷ் கார்த்திக் திரைப்படத்தின் அப்டேட்டை வெளியிட்ட நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ்!
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் செவன் வாரியர் ஃபிலிம்ஸ் மற்றும் வெயிலோ என்டர்டெயின்மென்ட் ஜே.ஜே.பி டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என பட குழு முன்பாகவே அறிவித்திருந்தது.
அதன்படி, இந்த திரைப்படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் அதில், ‘படம் மிகவும் சுவாரசியமாக உள்ளது. ”ஹாட் ஸ்பாட்” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பகிர்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.
இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.