நடிகை ஊர்வசியின் ஜே.பேபி பட லிரிக்கல் விடியோ!
நடிகை ஊர்வசி நடித்துள்ள ஜே. பேபி படத்தின் பாடல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பா. ரஞ்சித் நீலம் புரடக்ஷனை நடத்திவருகிறார்.
இதன் தயாரிப்பில் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் குண்டு, ரைட்டர், சேதுமான், பொம்மை நாயகி ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன.
நீலம் தயாரிப்பின் சார்பாக சமீபத்தில் கிரிக்கெட்டினை மையப்படுத்தி வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது.
நடிகை ஊர்வசி, நடிகர் தினேஷ் இணைந்து நடித்துள்ள ஜே. பேபி படம் விரைவில் வெளியாக உள்ளது. சுரேஷ் மாரி எழுதி இயக்கியுள்ளார்.
இந்தப் படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. நீலம் தயாரித்த படங்களில் முதன்முறையாக எந்தக் காட்சிகளும் நீக்காமலும் மியூட் செய்யப்படாமலும் யு சர்ட்பிகேட்டுடன் வெளியாகவிருக்கிறது.