Vijay: “அடேங்கப்பா எவ்ளோ பெரிய உதவி” விஜய்யை கோர்த்துவிட்ட மகேந்திரன்… சம்பவம் செய்த நெட்டிசன்கள்
சென்னை: கோலிவுட் மாஸ் ஹீரோ விஜய் விரைவில் அரசியலில் களமிறங்குகிறார். தவெக என்ற தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய், 2026 தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் விஜய் பற்றி மகேந்திரன் பேசிய வீடியோவை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
விஜய்யை ட்ரோல் செய்த நெட்டிசன்கள்
தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வரும் விஜய், விரைவில் சினிமாவில் இருந்தே விலகுவதாக அறிவித்துள்ளார். தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் ஷூட்டிங் முடிந்ததும் இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவுள்ளார் விஜய். அதன்படி தளபதி 69 தான் விஜய்யின் கடைசிப் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்தப் படத்தின் இயக்குநர் யார் என்பதும் தெரியவரும்.
அரசியலுக்காகவே தனது சினிமா பயணத்தை முடிவுக்கு கொண்டு வருகிறார் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்த விஜய், 2026 தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் உறுதியாக தெரிவித்துவிட்டார். விஜய்யின் இந்த முடிவுக்கு வரவேற்பும் எதிர்ப்பும் ஒருசேர கிடைத்து வருகின்றன. நடிகர் சமுத்திரகனி உள்ளிட்ட பலர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்றுள்ளனர்.
அதேபோல் ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்ட மேலும் சிலர் விஜய்யின் அரசியல் வருகை பற்றி விமர்சித்துள்ளனர். இந்நிலையில், விஜய்க்கு சப்போர்ட் செய்வதற்காக மகேந்திரன் பேசிய வீடியோ நெட்டிசன்களால் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான மாஸ்டர் மகேந்திரன், இப்போது ஹீரோவாக நடிக்கத் தொடங்கிவிட்டார்.
மகேந்திரன் குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய், அஜித் என முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் நடித்துள்ளார். விஜய்யுடன் அதிக படங்களில் நடித்துள்ள மகேந்திரன் தற்போது அவரது அரசியல் வருகைக்கும் சப்போர்ட் செய்து வருகிறார். சில தினங்களுக்கு முன்னர் விஜயகாந்த் மறைந்த பின்னர் அவருக்கு நாம் அரசியலில் வாய்ப்புக் கொடுக்கவில்லை. அதேபோல் விஜய்க்கும் வாய்ப்புக் கொடுக்காமல் விடக் கூடாது என பேசியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து தற்போதும் விஜய் பற்றி மகேந்திரன் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அதில், விஜய்யை சுத்தி நடக்குற விஷயங்களை வைத்து அவரது தனிப்பட்ட கேரக்டர் என்ன என்பதை முடிவு செய்யக் கூடாது எனக் கூறியுள்ளார். அதாவது மின்சார கண்ணா படப்பிடிப்பில் விஜய்யுடன் போட்டோ எடுக்க ரசிகர்கள் சிலர் காத்திருந்தார்களாம். இதுபற்றி முதலில் விஜய்க்கு தெரியாமல் இருந்துள்ளது, பின்னர் தனது உதவியாளரை கூப்பிட்டு திட்டிய விஜய், உடனே ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டார் என மகேந்திரன் கூறியுள்ளார்.