எச்சரிக்கையான கார்த்தி… மருமகளை பாதுகாப்பாரா மாமியார்? ஜீ தமிழ் சீரியலில் இன்று
ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்
ஜீ தமிழ் முதன்மை தமிழ் தொலைகாட்சிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது.
ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் அவற்றில் அதிக TRP புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, சீதா ராமன், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.
கார்த்திகை தீபம்:
ப்ளாப்பான ஐஸ்வர்யாவின் பிளான்.. கோவில் தீர்த்தத்தால் தீபாவுக்கு காத்திருக்கும் சிக்கல்
கார்த்திகை தீபம். சீரியலின் நேற்றைய எபிசோடில் மீனாட்சி தீபாவிற்காக காய்ச்சிய பாலில் ஐஸ்வர்யாவின் அம்மா யாருக்கும் தெரியாமல் மாத்திரையை கலந்த நிலையில் இன்று மீனாட்சி தீபாவுக்கு பால் கொண்டு வந்து கொடுக்க அதை அவள் குடிக்க போகும் சமயத்தில் தர்மலிங்கம் போன் பண்ண பாலை கீழே வைத்து போன் பேசுகிறாள். பிறகு போனை வைத்துவிட்டு மீண்டும் குடிக்க போகும்போது கார்த்திக் உள்ளே வந்து என்ன தீபா குடிக்கிறீங்க என்று கேட்க கோல்டா இருப்பதால் அக்கா பால் காய்ச்சி எடுத்துட்டு வந்தாங்க என்று சொல்ல நீங்க அதெல்லாம் குடிக்க வேண்டாம் என்று கார்த்திக் சொல்கிறான்.
தீபா ஏன் சார் குடிக்க வேண்டாம்னு சொல்றீங்க என்று கேட்க நீங்க பாடுறதை தடுக்கிறதுக்காக நிறைய சதி நடக்குது பால்ல ஏதாச்சும் கலந்து கூட இருக்கலாம் வேண்டாம் என்று சொல்ல மீனாட்சியின் கார்த்திக் சொல்வதில் சரிதான் என்று சொல்ல தீபா பாலை குடிக்காமல் விட்டு விடுகிறாள். இதனால் ஐஸ்வர்யாவின் பிளான் ப்ளாப் ஆகிறது. பிறகு கார்த்திக் தீபா ஆகியோர் கச்சேரிக்கு கிளம்பி அபிராமியை கூப்பிட அவள் ஐஸ்வர்யாவுடன் செக்கப் செல்வதாக சொல்கிறாள்.