Vijayakanth – பாலாவுடனான பிரச்னை.. அஜித்துக்கு விஜயகாந்த் உதவவில்லை.. பரபரப்பை கிளப்பிய பத்திரிகையாளர்
சென்னை: கேப்டன், புரட்சி கலைஞர் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். பல உதவிகளை செய்திருக்கும் அவர் நடிகராக மட்டுமின்றி தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்திருக்கிறார்.
ஒருகட்டத்தில் உடல்நலக்குறைவால் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்தார். இந்தச் சூழலில் பிரபல நடன அமைப்பாளராக இருந்த புலியூர் சரோஜா விஜயகாந்த் குறித்து எமோஷனலாக பேசியிருக்கிறார்.
விஜயகாந்த்தின் படங்கள் அனைத்தும் வரிசையாக ஹிட்டடித்தன. அதன் காரணமாக ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த் என்ற வரிசை தமிழ் சினிமாவில் உருவானது. சொல்லப்போனால் கிராமத்து பகுதிகளில் ரஜினி, கமல் ஹாசனைவிடவும் அதிக மவுசு விஜயகாந்த்துக்கு இருந்தது என்பதுதான் யதார்த்தமான உண்மை. மேலும் நமது வீட்டில் இருந்து ஒருவர் நடிக்க சென்றால் எப்படி இருப்பாரோ அதேபோல்தான் விஜயகாந்த்தும் இருந்தார் என்று பலரும் கூறுவார்கள்.
நடிகர் சங்க தலைவர்: நடிகராக மட்டுமின்றி நடிகர் சங்க தலைவராகவும் பொறுப்பேற்று அதனையும் திறம்பட கையாண்டார். கடனில் இருந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தை அவர்தான் அதிலிருந்து மீட்டார். மேலும் அனைத்து நட்சத்திரங்களையும் ஒன்றிணைத்து சிங்கப்பூர், மலேசியா சென்று கலை நிகழ்ச்சிகளையும் நடத்தினார் அவர். அதுமாதிரி இன்றுவரை ஒன்று நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் என்ட்ரி: நடிகர், நடிகர் சங்க தலைவர் என பிஸியாக இருந்த அவர் அரசியலில் நுழைந்து எதிர்க்கட்சி தலைவராகவும் மாறினார். ஆனால் இடையில் அவர் எடுத்த சில தவறான முடிவுகள், உடல்நலக்குறைவு ஆகியவை காரணமாக சறுக்கலை சந்தித்தார். பிறகு அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி கடந்த வருடம் டிசம்பர் மாதம் உயிரிழந்தார்.