Belly Fat: தொங்கும் தாெப்பையை சீக்கிரமாக குறைக்கலாம்! ‘இந்த’ யோகாசனங்களை செய்தால் போதும்..
Belly Fat Reduction Tips: உடல் பருமனுடன் இருப்பவர்கள், வயிற்றில் தொப்பையையும் வைத்துக்கொண்டு அதை குறைக்க முடியாமல் இருப்பர்.
வயிற்றில் வளரும் தொப்பை, உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, ஒல்லியாக இருப்பவர்களுக்கும் கூட வரும். இதற்கு பின்னால் கொழுப்பு சேருவதும் காரணமாக அமையலாம். உடல் எடையை குறைக்கவும், தொப்பையை குறைக்கவும் சில யோகா ஆசனங்கள் இருக்கிறது. அவை என்னென்ன தெரியுமா?
தொப்பையை குறைக்கும் யோகாசனங்கள்:
அடிவயிற்றில் உள்ள தொப்பை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என கூறுகின்றனர் மருத்துவர்கள். இது, உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் கூறலாம். வயிற்றில் அதிக கொழுப்பு இருப்பதன் காரணமாக பலருக்கு தொப்பை போடுகிறது. சரியாக தூங்காதது, சரியான உணவு முறை இல்லாதது, சில உடல் நலக்குறைபாடுகள் போன்றவற்றால் உடலில் எடை கூடும் என கூறுகின்றனர் மருத்துவர்கள். அந்த ஆசனங்களை இங்கு பார்ப்போம்.
1.உஸ்த்ராசனா:
இந்த ஆசனத்தை செய்யும் போது உங்கள் கை இடுப்பில் இருக்க வேண்டும். அப்படியே மண்டியிட்டு இருக்க வேண்டும். பின்னர், உங்களது கைகள், பாதங்களில் இருத்தல் வேண்டும். அப்படியே உங்கள் நெஞ்சை நேராக நிமிர்த்தி, மேலே தலையை தூக்க வேண்டும். இந்த நிலையில் சில நிமிடங்கள் அல்லது வினாடிகளுக்கு மூச்சை இழுத்து விட வேண்டும். இந்த நிலையில் இருந்து எழுந்து கொள்ளும் போது கைகளை மெதுவாக விலக்கி, பின்னர் எழுந்து நிற்க வேண்டும்.
2.ஹாலாசனா:
தரையில் படுத்துக்கொண்ட உங்கள் இரு பக்கங்களிலும் கைகளை நேராக வைத்துகொள்ள வேண்டும். உங்கள் முக்கிய தசைகளை கொண்டு, கால்களை 90 டிகிரிக்களுக்கு தூக்க வேண்டும். பின்னர் உங்களது கைகளை முதுகு பகுதியில் வைக்க வேண்டும். இதே நிலையில் சில நிமிடங்களுக்கு மூச்சை இழுத்து விட வேண்டும். 15 முதல் 20 வினாடிகளுக்கு இந்த நிலையில் இருக்கலாம்.