தினமும் கைப்பிடி அளவு ”உலர் திராட்சை” சாப்பிடுவதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகள்..!
சர்க்கரை நோயாளிகளும் உலர்திராட்சையை சாப்பிடலாம். இதில் நார்ச்சத்து இருப்பதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும்.
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளும். இதில் தாமிர சத்தி அதிக அளவில் உள்ளதால் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்.
உலர் திராட்சை சாப்பிடுவதால் எலும்பு மச்சைகள் வலுபெறும். இதயத்துடிப்பு சீராகும். கருவில் இருக்கும் குழந்தைக்கு தேவையான சத்துக்கள் தாய் மூலம் தான் கிடைக்கும். அதனால் கர்ப்பிணி பெண்கள் உலர் திராட்சையை பாலில் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கலாம்.
இவ்வாறு செய்தால் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும். தினமும் தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு 5 உலர் திராட்சையை பாலில் போட்டு காய்ச்சி சாப்பிடுவதால் ஆழ்ந்த உறக்கம் வரும்.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திராட்சையை தினமும் சாப்பிட்டு வரலாம். மஞ்சள் காமாலை உள்ளவர்கள் தினமும் இரண்டு வேளை உலர்திராட்சியை சாப்பிடுவதால் மஞ்சள் காமாலை நோய் குணமடையும்.