நீங்க ITR4 படிவத்தில் வருமான வரி செலுத்துபவரா..? முதல்ல இதை படிங்க..! முக்கியமான டெட்லைன் வருது..!
ITR4 படிவம் என்பது சொந்தமாக சொழில் செய்பவர்கள் பயன்படுத்தும் வருமான வரி தாக்கல் படிவும். இதை தாக்கல் செய்வோருக்கு பழைய மற்றும் புதிய வருமான வரி முறையில் குழப்பம் இருக்கும், இதை பொருளாதார வல்லுனரான ராஜேஷ் விளக்குகிறார்.
இது ITR4 படிவம் மூலம் வரி தாக்கல் செய்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.நீங்கள் பழைய வரி முறையை தேர்வு செய்திருந்தால், இந்த வருடம் வரி தாக்கல் செய்கையில், கூடுதலாக செய்ய வேண்டியது என்ன?மூன்று வருடங்களுக்கு முன்னர், புதிய வரி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இரண்டில் எதை தேர்ந்தெடுப்பது என்கிற முழு சுதந்திரம், வரி செலுத்துவோருக்கு இருந்தது. அதற்கு அடுத்த பட்ஜெட்டில், புதிய வரி முறையே default ஆக மாற்றி, அதற்கு சில சலுகைகளும் வழங்கப்பட்டது. உங்கள் அலுவலக சிஸ்டமில், புதிய வரி முறையை default ஆக கொண்டு வந்து, அதை நீங்கள் மாற்றினீர்கள்.
அப்படி மாறவில்லையென்றால், ITR பைலிங் செய்கையில் மாறுவதற்கு வழிவகை செய்யப்பட்டது (ஒரே ஒரு செலக்ஷன் செய்தால் மட்டும் போதுமானதாக இருந்தது).நடப்பு நிதியாண்டு முதல், உங்களுக்கு புதிய வரி முறையை default ஆக ஆக்கப்பட்டு, ITR பைலிங் செய்கையில் நீங்கள் பழைய வரி முறைக்கு க்கு மாற வேண்டுமானால், Form 10-IEA என்கிற படிவத்தை ஜூலை 31 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும்.
அப்படி குறிப்பிட்ட தேதிக்குள் தாக்கல் செய்யாவிட்டால், உங்கள் அலுவலகத்தில் நீங்கள் பழைய வரி முறையை தேர்வு செய்து, அதற்கான ஆவணங்களை நீங்கள் கொடுத்திருந்தாலும், உங்களது புதிய வரி முறை வாடிக்கையாளராக கருதி, அதற்கேற்றவாறு வரி கணக்கிடப்பட்டு, பிடித்தம் செய்யபடும். அந்த கணக்கீட்டில், அதிக வரி வந்தால், நீங்கள் கூடுதலாக செலுத்த வேண்டி வரும்.இந்த செயல்முறை, தனிநபர்களுக்கு (ITR1/ITR2/ITR3) பொருந்துமா என்கிற தகவலை, வருமான வரி ஆணையம் தெளிவு படுத்தவில்லை.