அதிகரித்துவரும் சட்டவிரோத புலம்பெயர்தல்: எல்லை பாதுகாப்பை மீண்டும் வலுப்படுத்தும் ஜேர்மனி

யூரோ 2024 கால்பந்து போட்டிகள் ஜேர்மனியில் நடைபெற உள்ள நிலையில், எல்லை பாதுகாப்பை மீண்டும் வலுப்படுத்த அந்நாடு முடிவு செய்துள்ளது.

அதிகரித்துவரும் சட்டவிரோத புலம்பெயர்தல்
ஜேர்மனியில் சட்டவிரோத புலம்பெயர்தல் அதிகரித்துவரும் நிலையில், தற்போது யூரோ 2024 கால்பந்து போட்டிகள் ஜேர்மனியில் நடைபெற உள்ளதால், எல்லை பாதுகாப்பை வலுப்படுத்த அந்நாடு முடிவு செய்துள்ளது. ஆகவே, எல்லையில் பாதுகாப்பு சோதனைகளை மீண்டும் நீட்டிக்க அரசு திட்டமிட்டுவருகிறது.

இது குறித்து பேசிய ஜேர்மன் உள்துறை அமைச்சரான நான்சி ஃப்ரேஸர், ஜேர்மனியில் சட்டவிரோத புலம்பெயர்வோரின் எண்ணிக்கை உண்மையாகவே அதிகரித்துள்ளது. என்றாலும் நாம் புகலிடக்கோரிக்கைகளை பதிவுசெய்துவருகிறோம். அதனால்தான் எல்லையில் நடைபெறும் பாதுகாப்பு சோதனைகளை மீண்டும் ஒருமுறை நீட்டிக்கவேண்டும் என நான் கருதுகிறேன் என்றார்.

ஜேர்மனி, கடந்த செப்டம்பரில் போலந்து மற்றும் செக் குடியரசுடனான எல்லைகளில் பாதுகாப்பு சோதனைகளை அறிமுகம் செய்தது. ஏற்கனவே 2015முதல் ஆஸ்திரியாவுடனான எல்லைகளில் பாதுகாப்பு சோதனைகள் நடைபெற்றுவருகின்றன.

தற்போது நடைமுறையிலிருக்கும் பாதுகாப்பு சோதனை காலகட்டம் மார்ச் மாதத்துடன் முடிவுக்கு வரும் நிலையில், ஜூன் மற்றும் ஜூலையில் யூரோ 2024 கால்பந்து விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

ஆகவே, விதிகளின்படி, கால்பந்து விளையாட்டை நடத்தும் நாடு என்ற முறையில், நாம் நம் நாட்டுடனான எல்லைகளில் பாதுகாப்பு சோதனைகளை அறிமுகம் செய்யவேண்டும் என்றார் நான்சி.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *