லண்டனில் கல்வி பயின்ற பெண் ஒருவரை காதலிக்கும் ரஷ்ய ஜனாதிபதி புடின்: வெளியான புகைப்படம்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் லண்டனில் கல்வி பயின்ற பெண் ஒருவரை புதிதாக காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புகைப்படம் உள்ளிட்ட தரவுகள்
குறித்த பெண், புடினுக்கு எதிராக இணைய பக்கங்களில் வெளியாகும் கருத்துகளை தணிக்கை செய்யும் பொறுப்பில் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

39 வயதான Ekaterina ‘Katya’ Mizulina என்பவர் தொடர்பில் உக்ரேனிய ஊடகங்களே புகைப்படம் உள்ளிட்ட தரவுகளை முதலில் வெளியிட்டுள்ளன. புடினுக்கு வெறித்தனமான ஆதரவாளரும் உக்ரேனிய எதிர்ப்பாளருமான செனட்டர் ஒருவரின் மகள் இவர் என்றும் தகவல் கசிந்துள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றுள்ள வீராங்கனை 40 வயது Alina Kabaeva என்பவரை பல ஆண்டுகளாக புடின் காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் 2 முதல் 3 பிள்ளைகள் வரையில் இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

உக்ரைன் மீதான போருக்கு பின்னர், Alina Kabaeva பாதுகாப்பான ஒருபகுதியில் குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால் தற்போது ரஷ்யா மற்றும் உக்ரேனிய சமூக ஊடகங்கள், விளாடிமிர் புடினின் புதிய காதலி தொடர்பிலேயே தகவல்களை பகிர்ந்து வருகின்றன.

கருத்து சுதந்திரம் தேவையில்லை
கடந்த 2004ல் லண்டன் பல்கலைக்கழகத்தில் Mizulina கல்வி பயின்றுள்ளார். கலை வரலாறு மற்றும் இந்தோனேசிய மொழியில் பட்டம் பெற்றவர். மட்டுமின்றி, சீனாவிற்கு வருகை தரும் ரஷ்ய உத்தியோகப்பூர்வ பிரதிநிதிகளின் மொழிபெயர்ப்பாளராகவும் Mizulina பணியாற்றியுள்ளார்.

கட்டற்ற கருத்து சுதந்திரம் இணையவாசிகளுக்கு தேவையில்லை என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருபவர் Mizulina. மட்டுமின்றி, மாணவர்களுடன் முன்னெடுக்கப்பட்ட சந்திப்பு ஒன்றில், ரஷ்யாவில் கட்டாய இராணுவ சேவையின் அவசியத்தை கேள்வி எழுப்பிய ஒரு மாணவரை மன்னிப்புக் கோர வைத்துள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *