தங்கம் போல் ஜொலிக்க சர்க்கரையில் ஊற வைத்த ஒரு நெல்லி போதும்…!
பொதுவாகவே நாம் எடுத்துக்கொள்ளும் பழங்களில் பல ஊட்டச்சத்துகள் காணப்படுகின்றது. அதிலும் புளிப்பு சுவையுடைய பழங்களில் ஏராளமாக விட்டமின்கள் இருகின்றன.
அதில் ஒன்று தான் நெல்லிக்காய். இது வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஒரு பழமாகும்.
இது சருமத்தை பிரகாசமாக்குவதற்கும் புத்துணர்ச்சியூட்டுவதற்கும் தோல் பராமரிப்பு நடைமுறைகளில் பெருமளவில் உதவுகிறது.
அந்தவகையில் நெல்லிக்காயை எப்படி முகத்தை பளபளக்க பயன்படுத்தலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
நெல்லிக்காய்
நாட்டு சர்க்கரை
செய்முறை
முதலில் இட்லி பாத்திரத்தில் நெல்லிக்காயை வைத்து அவித்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து அவித்து எடுத்த நெல்லிக்காயை ஒரு குச்சி வைத்து சிறிய துளைகள் போட்டுக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நாட்டு சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து பாகு தயார் செய்யவும்.
இறுதியாக சர்க்கரை பாகுவுடன் அவித்து வைத்துள்ள நெல்லிக்காயை சேர்த்து கிளறி, ஒரு போத்தலில் அடைத்துக்கொள்ளவும்.
இதை தினமும் சாப்பிட்டு வர முகத்தில் சிறந்த மாற்றத்தை பார்க்கலாம்.