Nike நிறுவனம் ஊழியர்களுக்கு கொடுத்த அதிர்ச்சி., 2 சதவீதம் ஆட்குறைப்பு
உலகின் மிகப்பாரிய Sports Brand-ஆன் Nike நிறுவனம் அதன் இரண்டு சதவீத பணியாளர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள முன்னணி நிறுவனங்களில் பணிநீக்கங்கள் நடந்து வருகின்றன.
அந்த வரிசையில், சமீபத்தில் மற்றொரு மாபெரும் நிறுவனம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தயாராக உள்ளது.
முன்னணி விளையாட்டு ஆடை உற்பத்தி நிறுவனமான Nike, உலகெங்கிலும் உள்ள இரண்டு சதவீத பணியாளர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
இரண்டு கட்டமாக ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் தொகுதி (இன்று) வெள்ளிக்கிழமை முதல் தொடங்கும் என்று தெரியவந்துள்ளது.
நான்காவது காலாண்டின் முடிவில் இருந்து இரண்டாவது சுற்று பணிநீக்கங்கள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செலவுக் கட்டுப்பாட்டின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
Nike உலகளவில் 83,700 பணியாளர்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.