கதை சொல்லும் திறமையால் ரூ 330 கோடி நிறுவனத்தை உருவாக்கிய பெண்… முழு பின்னணி

இணையமூடாக கல்வித்துறையில் சாதிக்க வேண்டும் என்ற பேரார்வம் கொண்ட இந்திய பெண் ஒருவர் சிங்கப்பூரில் சாதனைப் படைத்துள்ளார்.

கல்வி கட்டாயம் தேவை
சிங்கப்பூரில் மிகவும் பிரபலமான Little Paddington என்ற பாலர் பள்ளியை நடத்தி வருகிறார் Prerna Jhunjhunwala. மட்டுமின்றி, Creative Galileo என்ற 3 முதல் 10 வயது சிறார்களுக்கான கல்வி செயலி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இணையமூடாக கல்வியை கொண்டுசெல்ல வேண்டும் என்ற பேரார்வம் அவருக்கு இருந்து வந்துள்ளது. வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த கல்வி கட்டாயம் தேவை என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ள Prerna Jhunjhunwala சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தார். குழந்தைகளுக்குக் கற்பிக்கப்படும் கல்வியை நவீனமயமாக்குதல் மற்றும் மேம்படுத்துதல் மட்டுமே அவரது குறிக்கோளாக இருந்தது.

கதை சொல்லும் பேரார்வத்தால்
அவாது நிறுவனம் Toondemy மற்றும் Little Singham ஆகிய இரு கல்வி தொடர்பான செயலிகளை அறிமுகம் செய்துள்ளது. இதுவரை 1 கோடி எண்ணிக்கையில் இந்த செயலிகள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

2022 வரையில் சுமார் ரூ 60 கோடி வரையில் முதலீடுகளை ஈர்த்துள்ளார். கதை சொல்லும் தமது பேரார்வத்தால் உருவான நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ 330 கோடி என்றே கூறப்படுகிறது.

வரும் ஆண்டுகளில் பல்வேறு மொழிகளில் சிறார்களுக்கான கல்வி செயலியை அறிமுகம் செய்ய இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *