ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து.. சிறகடிக்க ஆசை மீனாவிற்கு என்ன ஆச்சு? வைரலாகும் வீடியோ!
தமிழகத்தின் முன்னணி சேனல்கள் அனைத்திலுமே தவறாமல் ஒளிபரப்பாகி வருகின்றன சீரியல்கள். பிரபல சேனல்களில் மதிய நேரங்களில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வரும் சீரியல்கள் இல்லத்தரசிகளையும், மாலை பிரைம் டைமிங்கில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வரும் சீரியல்கள் இளைஞர்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் கவர்ந்து TRP ரேட்டிங் லிஸிட்டில் இடம்பிடித்து வருகின்றன.
சினிமா படங்களுக்கு ரசிகர்கள் லட்சக்கணக்கில் இருப்பதைப் போன்று டிவிகளில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
அதோடு சீரியல்களில் நடிக்கும் நடிகர்களை தங்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்கள் போல அன்பு செலுத்தி வருகிறார்கள் பார்வையாளர்கள். இந்நிலையில் சீரியல்களுக்கு பிரபலமான விஜய் டிவியில் கடந்த ஜனவரி 23-ம் தேதி முதல் இரவு நேரம் சிறகடிக்க ஆசை எனும் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
எதிர்பாராத சூழ்நிலையில் திருமணம் செய்து கொள்ளும் மீனா மற்றும் முத்துக்குமாரை மையப்படுத்தி சிறகடிக்க ஆசை சீரியலின் கதை நகர்கிறது. இந்த தொடரில் மீனா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழக மக்களின் பேராதரவை பெற்றவர் நடிகை கோமதி ப்ரியா. இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் போன்ற தொடர்களிலும் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய காலில் அடிபட்டுள்ளதாக தற்போது வீடியோ வெளியிட்டுள்ளார். மலையாளத்தில் தான் நடித்து வரும் சீரியலில் ஷூட்டிங் ஸ்பாட்டில் அடிபட்டதாகவும் இது சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட தனது முதல் விபத்து என்றும் கோமதி பிரியா பதிவிட்டுள்ளார்.