ஒரு லட்சம் வரை EV கார்களின் விலையை அதிரடியாக குறைத்த டாடா.. இப்போ என்ன ரேட் தெரியுமா?

டியாகோ EV காரின் விலை சுமார் ரூ.70,000 வரை குறைக்கப்பட்டு தற்போது ரூ.7.99 லட்சத்திற்கு விற்கப்படுகிறது. அதேப்போல் நெக்ஸான் EV காரின் விலையும் ரூ.1.2 லட்சம் அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் எலெக்ட்ரிக் சப் காம்பேக்ட் SUV காரான இதன் ஆரம்ப விலை ரூ.14.49 லட்சமாகவும், நீண்ட தூரம் செல்லும் மாடல் ரூ.16.99 லட்சத்திற்கும் கிடைக்கிறது.

எலெக்ட்ரிக் வாகனங்களில் இருக்கும் பெரிய செலவே அதன் பேட்டரிதான். சமீபத்தில் பேட்டரி செல்களின் விலை வெகுவாக குறைக்கப்பட்டது. அதன் விளைவாகவே எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களின் ஒட்டுமொத்த விலையில் கணிசமான பங்கை பேட்டரியின் விலையே எடுத்துக் கொள்கிறது.

சமீபத்தில் பேட்டரி செல்களின் விலை குறைந்ததால், அந்த பயனை எங்களது வாடிக்கையாளர்களும் நேரடியாக பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தற்போது இந்த விலை குறைப்பை செய்துள்ளோம். கடந்த சில வருடங்களாக இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை அதிகரித்து வந்த போதிலும், நாடு முழுவதும் மக்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்வதுதான் எங்களது நோக்கம்.

பல வகையான வடிவமைப்பு, ரேஞ்ச், விலை என ஏற்கனவே எங்களது போர்ட்ஃபோலியோவில் பல எலெக்ட்ரிக் கார்கள் இருக்கின்றன. இந்த எலெக்ட்ரிக் கார்கள் ஸ்மார்ட்டாக இருப்பதோடு பல நவீன வசதிகளையும் கொண்டுள்ளது. தற்போது நெக்ஸான் EV மற்றும் டியாகோ EV கார்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதால், நிறைய வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டுவார்கள் என நம்பிக்கையோடு கூறுகிறார் டாடா மோட்டர்ஸ் நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி விவேக் ஸ்ரீவத்ஸா.

இந்த விலை குறைப்பால், டியாகோ EV காரின் பேஸ் மாடல் விலை, எம்ஜி காமெட் (MG Comet) EV விலையை விட ஒரு லட்சம் அதிகமாக உள்ளது. சமீபத்தில் தான் எம்ஜி காமெட் காரின் விலையும் குறைக்கப்பட்டது. XE, XT, XZ+, XZ+Lux என நான்கு மாடல்களில் தற்போது டியாகோ EV கார் கிடைக்கிறது. மீடியம் ரேஞ்ச் மற்றும் அதிக ரேஞ்ச் என இரண்டு பிரிவுகளில் வரும் டியாகோ EV, ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகப்பட்சமாக 250கி.மீ முதல் 315கி.மீ வரை செல்கிறது.

இதேப்போல் நெக்ஸான் EV காரும் கிரியேட்டிவ், ஃபியர்லெஸ் மற்றும் எம்பவர்ட் என்ற மூன்று மாடல்களில் கிடைக்கிறது. இந்த காரின் மீடியம் ரேஞ்ச் 325கி,மீ தூரமும் அதிகப்பட்ச ரேஞ்ச் 465கி.மீ தூரமும் செல்ல கூடியதாக இருக்கிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *