‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் கீழ் 35 நாள்களில் 3.5 லட்சம் பேரின் குறைகளுக்குத் தீர்வு..!
முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல், மக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கிறார். அந்த வகையில், ‘மக்களுடன் முதல்வர்’ என்னும் ஒரு முன்னோடித் திட்டத்தை கோவையில் கடந்தாண்டு டிச.18-ல் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் கீழ் 35 நாள்களில் 3.50 லட்சம் பேரின் குறைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.இதற்காக மொத்தம் 2,058 முகாம்கள் நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வருவாய்துறை மூலமாக 42,900 பேர் பட்டா மாறுதல் பெற்றுள்ளனர். 18,000 பேர் பல்வேறு சான்றிதழ்களை பெற்றுள்ளனர். ‘
மின்சார வாரியத்தின் கீழ் 26 ஆயிரத்து 383 பேர் புதிய இணைப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற்றுள்ளனர்.
நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலமாக 37,700 பேர் கட்டிட அனுமதி, புதிய குடிநீர் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற்றுள்ளனர்.
சிறுகுறு வணிகர்கள் துறையில் 1,190 பேர் 60 கோடி ரூபாய் அளவுக்கு தொழில் தொடங்க கடன் உதவி பெற்றுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 10 கோடி ரூபாய் அளவுக்கு 3,269 பேர் மூன்று சக்கர நாற்காலிகள், கடன் உதவி உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற்றுள்ளனர்
.
கூட்டுறவுத்துறை சார்பில் 6.6 ரூபாய் அளவிற்கு பல்வேறு சேவைகளை மக்கள் பெற்றுள்ளனர்.
30 நாளில் 3.50 லட்சம் பயனாளிகள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளனர்
என மக்களுடன் முதல்வர் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.