வெளியான நயன்தாராவின் அண்ணன் புகைப்படம்..!
20 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் ஹீரோயினாக நடித்து தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. மேலும் இவர் நடிகையாக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். இதுபோக அழகு சாதன பொருட்கள், சானிட்டரி நாப்கின் என பெண்களுக்கான பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிலை நடத்தி அதன் மூலம் தனது நல்ல வருமானம் ஈட்டி வருகிறார். இப்படி தனது தொழிலில் மவுசு காட்டி வரும் இவர் மற்றொரு பக்கம் தன் குடும்பத்துடன் மிக மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
தென்னிந்தியாவின் ஸ்டார் நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர். ஒரு மகனுக்கு ‘உயிர் ருத்ரேனில் என் சிவன்’ என்றும் மற்றொரு குழந்தைக்கு ‘உலக தெய்வக் என் சிவன்’ என்றும் பெயர் சூட்டியுள்ளதாக அறிவித்தனர்.இவர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார் நயன்தாரா.
இந்த நிலையில் நயன்தாராவின் அண்ணனின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. உங்களுக்கு அண்ணன் இருக்காங்களா? இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே என கமெண்ட் செய்து வருகின்றனர். நயன்தாராவின் அண்ணன் பெயர் லெனோ. விக்னேஷ் சிவன் – நயன்தாரா இருவரின் தோளையும் அணைத்தபடி லெனோ போஸ் கொடுத்துள்ள புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த நிலையில் நயன்தாராவின் அண்ணன் புகைப்படம் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.