+2 பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி..!
தமிழக அரசு பாடத்திட்டத்தின் கீழ் 10, 11 ,12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு விரைவில் பொதுத்தேர்வு வர இருக்கிறது. இது குறித்து வெளியான அறிவிப்பில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 4 ஆம் தேதி முதல் மார்ச் 25 ஆம் தேதி வரையும், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8 ஆம் தேதி வரை தேர்வு நடைபெற இருக்கிறது.
அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் பிப். 20 ஆம் தேதி முதல் பள்ளி தலைமை ஆசிரியர்கள் டவுன்லோட் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹால் டிக்கெட்டைப் பெறுவது எப்படி?
* மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
* Online Portal என்ற வாசகத்தினை “Click” செய்தால் “HIGHER SECONDARY FIRST YEAR / SECOND YEAR EXAM MARCH – 2024” என்ற பக்கம் தோன்றும்.
* அதில், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் ஐடி, கடவுச்சொல் ஆகியவற்றைக் கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகளுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் தவறாமல் பதிவிறக்கம் செய்துகொள்ளவேண்டும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.