Today Gold Rate in Chennai: கிடுகிடுவென உயரும் தங்கம் விலை! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்! இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது.

நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.46,080க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.5,760-க்கு விற்பனையானது.

இன்றைய (பிப்ரவரி 17) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.46,240-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.5,780-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,250ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.50,000-ஆக விற்பனையாகிறது.

வெள்ளி விலை ஒரு ரூபாய் உயர்ந்து கிராம் வெள்ளி ரூ.78.00க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.78,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *