இந்திய மண்ணில் எந்த வீரரும் செய்யாத மெகா பேட்டிங் ரெக்கார்டு.. பொளந்து கட்டிய இங்கிலாந்து வீரர்

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் இந்திய அணிக்கு எதிராக அதிரடி ஆட்டம் ஆடி சதம் கடந்து பின்னர் 150 ரன்களையும் கடந்தார். அவர் 139 பந்துகளில் 150 ரன்களை எட்டி இந்திய மண்ணில் இமாலய சாதனை படைத்துள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து அணிகள் ஆடி வரும் ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 445 ரன்கள் குவித்தது. அடுத்து இங்கிலாந்து அணியை கட்டுப்படுத்த முடியாமல் பந்துவீச்சில் கோட்டை விட்டது இந்திய அணி. குறிப்பாக அந்த அணியின் துவக்க வீரர் பென் டக்கெட் அதிரடி ஆட்டம் ஆடி மிரள வைத்தார்.

139 பந்துகளில் 150 ரன்களை கடந்த அவர் பின்னர் 153 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்திய மண்ணில் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அதிவேக 150 ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்து இருக்கிறார் இங்கிலாந்து வீரர் பென் டக்கெட்.

இந்திய மண்ணில் இந்திய அணிக்கு எதிராக அதிவேக 150 ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியல் :

139 பந்துகள் – பென் டக்கெட் (இங்கிலாந்து) – ராஜ்கோட், 2024

201 பந்துகள் – கெவின் பீட்டர்சன் (இங்கிலாந்து) – மும்பை, 2012

209 பந்துகள் – இன்சமாம்-உல்-ஹக் (பாகிஸ்தான்) – பெங்களூரு, 2005

212 பந்துகள் – ஒல்லி போப் (இங்கிலாந்து) – ஹைதராபாத், 2024

218 பந்துகள் – பிரண்டன் மெக்குல்லம் (நியூசிலாந்து) – ஹைதராபாத், 2010

முன்னதாக இந்திய அணி முதல் இன்னிங்ஸ் பேட்டிங் செய்த போது ரோஹித் சர்மா 131 ரன்கள் குவித்து சதம் அடித்து இருந்தார். ரவீந்திர ஜடேஜா 112 ரன்கள் குவித்து சதம் கடந்து இருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பென் டக்கெட் அதிரடி ஆட்டம் ஆடி 153 ரன்கள் குவித்து இருக்கிறார். பென் டக்கெட் விக்கெட் இழந்த போது, இங்கிலாந்து அணி 260 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து இருந்தது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *