Oneplus, Realme: இந்திய நிறுவனத்துடன் புதுக் கூட்டணி.. இனி போன் விலை குறையுமா..?

சீனாவின் மிகப்பெரிய மொபைல் போன் தயாரிப்பாளரான BBK குழுமம், இந்திய ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களான Dixon Technologies மற்றும் Karbonn Group உடன் இணைந்து தனது Oppo, Vivo மற்றும் Realme ஸ்மார்ட்போன்கள் தயாரிக்கத் தொடங்குவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாட்டு ஸ்மார்ட்போன் நிறுவனங்களை இந்திய உற்பத்தி நிறுவனங்கள் உடன் கூட்டணி சேர்ந்து தனது உற்பத்தியைத் துவங்க அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது. இதேவேளையில் இந்திய உற்பத்தி நிறுவனங்கள் உடன் இணையும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஸ்மார்ட்போன் உற்பத்திக்கான PLI திட்டத்தின் பலனும் அளிக்கப்படும்.

இதன் வாயிலாகச் சீனாவின் BBK குழுமம் தனது Oppo, Vivo மற்றும் Realme முலம் மிகப்பெரிய வர்த்தகத்தை இந்தியாவில் கொண்டு இருக்கிறது. இந்திய சந்தையை எந்தொரு காரணத்திற்காகவும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதற்காக மத்திய அரசின் விதிமுறைக்கு இணங்க முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் Oppo மற்றும் Vivo பிராண்டுகள் தனித்தனியாக ஒரு பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு தொழிற்சாலையைக் கொண்டிருந்தாலும் இந்திய நிறுவனத்துடனான கூட்டணி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

BBK குழுத்திற்குக் கீழ் Oppo, Vivo, Realme மட்டும் அல்லாமல் OnePlus மற்றும் iQoo போன்ற பிராண்டுகளும் உள்ளது. இந்தப் பிராண்டுகளின் உள்நாட்டு விற்பனையில் குறிப்பிடத்தக்க உற்பத்தி இனி Dixon Technologies மற்றும் Karbonn Group உடன் இணைந்து செய்யும்.

கடந்த சில ஆண்டுகளில் சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் வர்த்தகத்தில் செய்து வரும் முறைகேடுகள் தொடர்பாகப் பல மத்திய அரசு அமைப்புகள் பல்வேறு ஆய்வுகள், வழக்குகள், நெருக்கடிகள் என, சுங்க வரி மற்றும் வருமான வரி ஏய்ப்பு முதல் பணமோசடி வரையிலான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.

கடந்த சில ஆண்டுகளில் சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் வர்த்தகத்தில் செய்து வரும் முறைகேடுகள் தொடர்பாகப் பல மத்திய அரசு அமைப்புகள் பல்வேறு ஆய்வுகள், வழக்குகள், நெருக்கடிகள் என, சுங்க வரி மற்றும் வருமான வரி ஏய்ப்பு முதல் பணமோசடி வரையிலான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அதன் உற்பத்தி திறன் விரிவாக்கத்திற்காக நேரடியாக முதலீடு செய்வதில் மிகவும் எச்சரிக்கையாகச் செயல்படுகிறது. இதேவேளையில் உள்நாட்டு கூட்டணி நிர்ப்பந்தம் வந்த நிலையில் இதைப் பயன்படுத்திக்கொண்டது.

பல ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன, பல நிறுவனத்தின் வர்த்தகம் முடக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து விசாரணைகள் நடந்து கொண்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய – சீன எல்லைப் பதற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து சீன நிறுவனங்கள் இந்தியாவில் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *