STR 48.. யப்பா சிம்பு ஏற்கப்போகும் ரோல் இதுவா?.. இதுவரை செய்யாத விஷயம்.. சம்பவம் காத்திருக்கோ

நடிகர் சிம்பு தற்போது கமல் ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48ஆவது படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. இரட்டை வேடங்களில் நடிக்கும் சிலம்பரசன் கண்டிப்பாக இந்தப் படத்தின் மூலம் மெகா ப்ளாக்பஸ்டரை கொடுப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். இந்தச் சூழலில் படத்தில் சிம்புவின் ரோல் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

எஸ்டிஆர், அட்மேன் என ரசிகர்களால் அழைக்கப்படும் சிம்பு சில காரணங்களால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். பிறகு உடல் எடையை குறைத்து எண்ணங்களை ஒருநிலைப்படுத்தி ஈஸ்வரன் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். ஆனால் படம் சரியாக போகவில்லை. அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ப்ளாக்பஸ்டர் ஆனது. சிம்புவின் நடிப்பும், வெங்கட் பிரபுவின் மேக்கிங்கும் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்துப்போக படமானது நூறு கோடி ரூபாய் வசூலித்து கெத்து காட்டியது.

அடுத்தடுத்த ஹிட்: மாநாடு வெற்றிக்கு பிறகு சிம்பு வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களில் நடித்தார். இவற்றில் வெந்து தணிந்தது காடு படம் சூப்பர் ஹிட்டானது. அதில் சிம்புவின் நடிப்பு பெரிதளவு பேசப்பட்டது. அடுத்து நடித்த பத்து தல திரைப்படம் சரியாக போகவில்லை. சூழல் இப்படி இருக்க கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48ஆவது படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் சிலம்பரசன்.

எஸ்டிஆர் 48: இந்தப் படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. தேசிங்கு பெரியசாமி இயக்கம் என்பதால் கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டாகும் என்ற நம்பிக்கை எஸ்டிஆர் ரசிகர்களிடம் இருக்கிறது. இப்படத்துக்காக சிம்பு செம ஃபிட்னெஸ்ஸோடு இருக்கிறார். அதுமட்டுமின்றி மார்ஷியல் ஆர்ட்ஸ் உள்ளிட்ட கலைகளையும் அவர் கற்றுக்கொண்டதாக தெரிகிறது. இதற்காக அவர் தாய்லாந்து, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களுக்கு மகிழ்ச்சி : படத்தின் அறிவிப்பு வெளியானதோடு அதற்கு பிறகு எந்தவிதமான மூவ்மெண்ட்டும் தெரியவில்லை. இதன் காரணமாக ஒருவேளை படத்தை ட்ராப் செய்துவிட்டார்களோ என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்தது. அதற்கும் படக்குழு எந்த பதிலையும் அளிக்காமல் மௌனம் காத்துவந்தது. அதனையும் கவனித்த ரசிகர்கள், அவ்ளோதான் எஸ்டிஆர் 48 முடிந்துவிட்டதுபோல என்று உறுதியாகவே சமூகவலைதளங்களில் ஓபனாக பேச ஆரம்பித்தனர். ஆனால் அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

இரட்டை வேடம்: ஏற்கனவே எதிர்பார்த்தபடி இப்படத்தில் சிம்பு இரட்டை வேடங்களில் நடிக்கிறார். ஃபர்ஸ்ட் லுக்கில் சிம்புவை பார்த்த ரசிகர்கள் மெர்சலாகினர். இப்படம் பீரியட் படமாகவும், தற்காலத்தில் நடக்கும் படமாகவும் உருவாகும் என்று படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரத்திலிருந்து தகவல் கசிந்திருக்கிறது. மேலும் படத்தில் பல போர் காட்சிகள் இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தில் சிம்பு ஏற்கவிருக்கும் ரோல் குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.

என்ன ரோல்?: அதன்படி இப்படத்தில் சிம்பு திருநங்கை கதாபாத்திரத்தை ஏற்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை சிம்பு அந்த ரோலை எந்தப் படத்திலும் ஏற்றதில்லை. சிம்பு சிறந்த நடிகர் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே அவர் திருநங்கை ரோலை ஏற்றால் கண்டிப்பாக தனது நடிப்பில் தரமான சம்பவம் செய்வார் என்று எஸ்டிஆர் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *