2 கோடி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை உடனே மாற்ற வேண்டும்! உங்க கார்டும் லிஸ்டல இருக்குதா? முழு விபரங்கள் இதோ!

பேடிஎம் நிறுவனத்தின் மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்த பின்பு பேடிஎம் மூலம் பெறப்பட்ட ஃபாஸ்ட் டேக் கார்டுகள் எல்லாம் வரும் 29-ம் தேதிக்கு பிறகு டெபாசிட் செய்ய முடியாத சூழ்நிலைக்கு மாறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ ஃபாஸ்ட் டேக் விநியோகஸ்தர்கள் பட்டியலில் இருந்து பேடிஎம்-ஐ நீக்கி உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ரிசர்வ் வங்கி இந்த மாத துவக்கத்தில் பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் மீது நடவடிக்கை எடுத்தது. முறையாக விதிமுறைகளை பின்பற்றாததன் காரணமாக இந்த நடவடிக்கையை எடுத்தது. இதனால் வரும் 29ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் மூலம் அந்நிறுவனம் எந்த விதமான டெபாசிட்களையும் ஏற்கக்கூடாது என தெரிவித்து இருந்தது. பேடிஎம் பேமெண்ட் பேங்க் மூலம் தான் பேடிஎம் நிறுவனம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை விநியோகம் செய்து வந்தது.

வரும் 29ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் ஃபாஸ்ட்டேக் கார்டில் டெபாசிட் செய்ய முடியாததால் இருக்கும் பணத்தை மட்டுமே ஃபாஸ்ட் டேக்கில் பயன்படுத்த முடியும் அதன் பின்னர் ஃபாஸ்ட் டேக்கில் இந்த கார்டுகள் எல்லாம் பிளாக் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் தற்போது புதிதாக ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தனது அதிகாரப்பூர்வ ஃபாஸ்ட் டேக் கார்டு விநியோகம் செய்யும் வங்கிகள் குறித்த பட்டியலை வெளியிட்டு இருந்தது.

வரும் 29ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் ஃபாஸ்ட்டேக் கார்டில் டெபாசிட் செய்ய முடியாததால் இருக்கும் பணத்தை மட்டுமே ஃபாஸ்ட் டேக்கில் பயன்படுத்த முடியும் அதன் பின்னர் ஃபாஸ்ட் டேக்கில் இந்த கார்டுகள் எல்லாம் பிளாக் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் தற்போது புதிதாக ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தனது அதிகாரப்பூர்வ ஃபாஸ்ட் டேக் கார்டு விநியோகம் செய்யும் வங்கிகள் குறித்த பட்டியலை வெளியிட்டு இருந்தது.

இந்த பட்டியலில் பேடிஎம் பேமென்ட் பேங்க் நிறுவனத்தின் பெயர் இல்லை. அதாவது அதிகாரப்பூர்வமாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சகமும் பேடிஎம் பேமென்ட் பேங்க் நிறுவனத்தை தனது அதிகாரப்பூர்வ ஃபாஸ்ட் டேக் விநியோகஸ்தர் பட்டியலில் இருந்து நீக்கி உள்ளது. இந்நிலையில் பேடிஎம் மூலம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை வாங்கி பயன்படுத்தி வரும் பயனாளர்கள் பலர் சிக்கல் தவித்து வருகின்றனர்.

பலர் இந்த பேடிஎம் ஃபாஸ்ட்டேக் அதை வேறு வங்கிக்கு மாற்றலாமா என்று எல்லாம் யோசித்து வருகின்றனர். இப்படியாக பேடிஎம் ஃபாஸ்ட் டேக் கார்டை வாங்கி பயன்படுத்தி வரும் பயனாளர்களுக்கு அடுத்து தொடர்ந்து ஃபாஸ்ட் கார்டை பயன்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் கீழே விரிவாக காணலாம் வாருங்கள்.

பேடிஎம் ஃபாஸ்ட் டேக் கார்டை பயன்படுத்தி வரும் பலர் இதே கார்டை அப்படியே வேறு வங்கிக்கு மாற்றலாமா என கேட்டு வருகின்றனர். இப்படியான மாற்றுவதற்கான வாய்ப்பு முற்றிலும் கிடையாது. இதனால் நீங்கள் புதிதாக ஒரு கார்டை வாங்க வேண்டும் என்பதே உங்களுக்கு இருக்கும் ஒரே வழி அதற்கு முன்னர் தற்போது நீங்கள் பயன்படுத்தி வரும் கார்டை சரண்டர் செய்ய வேண்டும்.

பேடிஎம் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தொடர்பு கொண்டு உங்கள் கார்டு மற்றும் உங்கள் மொபைல் நம்பரை குறிப்பிட்டு நீங்கள் கார்டை டிஆக்டிவேட் செய்ய வேண்டும். கார்டு எதற்காக டீஆக்டிவேட் செய்கிறீர்கள் என்பதை அவர்களிடம் சொல்லி டிஆக்டிவேட் செய்யலாம். ஏனெனில் உங்கள் காரின் பதிவு எண்ணில் ஏற்கனவே ஒரு ஃபாஸ்ட் டேக் கார்டு இருந்தால் மட்டும் ஒரு ஃபாஸ்ட் டேக் கார்டை வழங்க இயலாது.

நீங்கள் ஃபாஸ்ட் டேக் கார்டை பேடிஎம்-ல் இருந்து டிஆக்டிவேட் செய்தவுடன் நீங்கள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வங்கி மூலம் நேரடியாக நீங்கள் புதிதாக ஃபாஸ்ட் டேக் கார்டை அப்ளை செய்து வாங்கிக் கொள்ளலாம். இப்படியாக வாங்கும் போது உங்களது ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டியது இருக்கும். அதாவது வாகனத்தின் பதிவெண் மற்றும் உங்களது தனிப்பட்ட ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *