Parenting Tips : குழந்தைகளிடம் இருந்து பெற்றோர் புரிந்துகொள்ள தவறும் விஷயங்கள் என்ன?

குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் பல புரிதலின்மைகள் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் கடினமான மற்றும் சிக்கலான ஒன்றாகும். எனவே நன்முறையில் குழந்தை வளர்க்க உங்களுக்கு சில அறிவுரைகளை வழங்குகிறோம். குழந்தைகளை கையாள்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

சிக்கலான உணர்வுகள்

குழந்தைகளுக்கு பல்வேறு உணர்வுகள் ஏற்படுகிறது. பெற்றோர் அவற்றை உணர்ந்து அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பெற்றோர் குழந்தைகளின் உணர்வுகளுக்கு எப்போதாவதுதான் மதிப்பு தருகிறார்கள். எனவே அவர்களுக்கு பாதுகாப்பான சுற்றுச்சூழலை ஏற்படுத்தித்தர வேண்டியது பெற்றோரின் கடமை. அப்போதுதான் குழந்தைகள் தங்களின் யோசனைகளை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வார்கள். உங்கள் குழந்தையின் கோணத்தில் அவர்களின் சூழலை புரிந்துகொண்டீர்கள் என்றால், நீங்கள் அவர்களிடம் அனுதாபத்துடன் நடந்துகொள்கிறீர்கள் என்று அர்த்தம்.

சுதந்திரம்

குழந்தைகள் வளரவளர அவர்களுக்கு அதிக சுதந்திரம் தேவைப்படுகிறது. இது பெற்றோருக்கு சவாலான ஒன்று. அவர்களுக்கு சுதந்திரம் கொடுப்பது மற்றும் அவர்களுக்கு எல்லைகளை வகுப்பது, வழிமுறைகளை விதிப்பது என பெற்றோருக்கு ஏற்படும் சவாலாகும். உங்கள் குழந்தைகள் மீது உங்களின் முழு கவனத்தையும் செலுத்துங்கள். அவர்கள் என்ன கூறுகிறார்கள் மற்றும் அவர்கள் சைகை மூலம் எதை உணர்த்துகிறார்கள் என இரண்டையுமே நன்றாக உற்று கவனியுங்கள்.

தனித்தன்மை

குழந்தைகள் வித்யாசமானவர்கள். அவர்களின் ஆளுமை, விருப்புவெறுப்பு என ஒவ்வொருவரின் தேர்வைப்பொருத்து, ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள். பெற்றோர்தான் தங்கள் குழந்தைகளின் தனித்தன்மைகளை மறந்துவிடுகிறார்கள். வாழ்க்கைக்கு என்று சில விதிகளையும், பல வழிமுறைகளையும் வகுத்துவிடுகிறார்கள். அதைப்பின்பற்றி குழந்தைகள் வாழவேண்டும் என்று வற்புறுத்துகிறோம். எனவே அவர்களிடம் வெளிப்படையாக உரையாடி, அவர்களின் விருப்பு, வெறுப்புக்களுக்கு ஏற்ற வாழ்க்கையை அவர்கள் வாழ்வதற்கான வகைகளை செய்துகொடுங்கள்.

சமூக வலைதளங்களில் பாதிப்பு

குழந்தைகளுக்கு தற்போது மற்றுமொரு தடை உள்ளது. அது அவர்களுக்கு சுமையையும், பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. இந்த டிஜிட்டல் காலத்தில் அதன் தாக்கத்திலிருந்து ஒருவர்கூட தப்பிக்கமுடியாத நிலைதான் உள்ளது. சமூக வலைதளங்களும் தங்கள் குழந்தைகளை பாதிக்கிறது என்பதை பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும். எனவே பெற்றோர் என்றால் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு கற்க வேண்டிய கடமை உள்ளது. எனவே கற்றுக்கொண்டு குழந்தைகளுக்கு என்ன தேவையோ அதை நீங்கள் புரிந்துகொள்வது அவசியம்.

அறிவை வளர்த்துக்கொள்ளும் திறன்

ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு மாதிரி கற்கும் திறன் பெற்றவர்கள். ஒருவருக்கு பயன்படுத்தும் முறை மற்றவருக்கு பயன்படாது. இது பெற்றோர் புரிந்துகொள்ள சிறிது கடினமான ஒன்றாக இருக்கும். எனவே இந்த வேறுபாடுகளை புரிந்துகொள்ளுங்கள. எனவே உங்களின் எல்லைகளை விரிவாக்க முயற்சிசெய்யுங்கள். மற்ற பெற்றோர் என்ன செய்கிறார் என்றும் தெரிந்துகொள்ளுங்கள். உங்களின் அறிவுத்திறனுக்கு எற்பவும் செயல்படுங்கள்.

சமூக அழுத்தம்

குழந்தைகள் தங்களின் பல்வேறு காலகட்டங்களிலும் சமூக அழுத்தத்தை அனுபவிக்கிறார்கள். அவர்களின் குழந்தைகளுக்கு அதுபோன்ற ஏற்படும் அழுத்தங்கள் குறித்து பெற்றோருக்கு தெரிவதில்லை. எனவே உங்கள் பேரன்டிங் ஸ்டைலை மாற்றிக்கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு புதிய கஷ்டங்கள் ஏற்படும்போது அதற்கேற்றார்போல் புரிந்துகொண்டு நீங்கள் நடந்துகொள்ளுங்கள்.

மன அழுத்தம்

மனஅழுத்தம் மற்றும் பதற்றம் குழந்தைகளுக்கு பொதுவான ஒன்று. ஆனால் பெற்றோர் இந்த அறிகுறிகளை பார்ப்பதேயில்லை. குழந்தைகளின் மனநலனை நீங்கள் பாதுகாக்க வேண்டுமென்றால், அவர்களின் பல்வேறு அழுத்தங்கள் குறித்தும் புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் குழந்தைகளை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை அல்லது சில தடைகளை கடக்க முடியவில்லையென்றால், உளவியல் நிபுணர்களை அணுகுவது சிறந்தது. எனவே நல்ல நிபுணர்களின் வழிகாட்டலுடன் உங்கள் குழந்தைகளின் பிரச்னைகளை அணுகுவது சிறந்தது.

கோணத்தில் மாற்றம்

குழந்தைகள் வளரவளர அவர்களின் பார்வை மற்றம் கோணத்தில் மாற்றம் ஏற்படும். எனவே மாறும், வளரும் அவர்களின் பார்வைகள் மற்றும் கோணங்களை புரிந்துகொள்ள பெற்றோர் முயற்சிசெய்ய வேண்டும். பெற்றோர் – குழந்தைகள் உறவில் புரிதல் அதிகரிக்கும்போதுதான் அவர்களின் பிரச்னைகள் தீர்க்கப்படும். எனவே பெற்றோர் அதற்கு ஏற்றால்போல் செயல்படுவது குழந்தைகளின் நலனுக்கு நல்லது.

குழந்தைகளுடன் உரையாடுங்கள்

குழந்தைகள், இளைஞர்கள், வளர்ந்தவர்கள் என ஒவ்வொரு பருவத்தினரும் ஒவ்வொரு மாதிரி உரையாடுவார்கள். எனவே குழந்தை உரையாடலில் உள்ள அர்த்தத்தை புரிந்துகொள்ள பெற்றோரால் முடியும். எனவே பேரன்டிங் டெக்னிக்குகள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள். குழந்தையின் வளர்ச்சிக்கும், உங்கள் குழந்தைகளின் வாழ்வுக்கும் உதவும் தலைப்புகள் குறித்து நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள். அதன்படி அவர்களுக்கு வழிகாட்டுங்கள்.

வளர்ச்சி கட்டங்கள்

குழந்தகளுக்கு பல வளர்ச்சிகட்டங்களை எதிர்கொள்கிறார்கள். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தேவை மற்றும் கஷ்டங்கள் உள்ளது. எனவே பெற்றோர் புரிந்துகொள்ளவில்லையென்றால், அது மிகவும் கஷ்டம். எனவே அவர்களின் வளரும் தேவைக்கு ஏற்ப பெற்றோர் தங்களை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *