கணவர்களை விட இல்லத்தரசிகள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் கிடையாது..!
இன்று மனு ஒன்றின் மீதான விசாரணையின்போது வீட்டை கவனித்துக்கொள்ளும் இல்லத்தரசிகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றம். அதாவது வீட்டில் இல்லத்தரசிகள் செய்யும் வேலைகள், வேலைக்கு சென்று சம்பாதிக்கும் கணவர்களுக்கு எவ்விதத்திலும் குறைவு கிடையாது.
குடும்பத்தை கவனித்துக்கொள்ளும் பெண்கள், பெரும் மதிப்பிற்குரியவர்கள். அவர்களின் பங்களிப்பை பணத்தால் கணக்கிடுவது கடினம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.