சுவிஸ் சாலையில் கார் பந்தயம்… சைக்கிளில் வந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்: பெற்றோர் கோரிக்கை
சுவிட்சர்லாந்தில், நள்ளிரவில் கார் பந்தயத்தில் ஈடுபட்ட நபர்களால் இளம்பெண் ஒருவர் பரிதாபமாக பலியானார்.
சைக்கிளில் வந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
சுவிட்சர்லாந்தின் Lausanne மாகாணத்தில், அதிகாலை 2.00 மணியளவில் இளம்பெண் ஒருவர் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது சிலர் சாலையில் கார் பந்தயத்தில் ஈடுபட்டுள்ளார்கள். மணிக்கு 100 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்தில் வந்த கார் ஒன்று அந்த இளம்பெண்ணின் சைக்கிள் மீது மோத, அவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
இந்த பரிதாப சம்பவம் கடந்த ஜூலை மாதம் நடந்த நிலையில், மகளை இழந்த பெற்றோர், சைக்கிள்கள் செல்லும் பாதையை அகலப்படுத்துமாறும், சம்பவம் நடந்த சாலையில் வேகக்கட்டுப்பாடு விதிக்குமாறும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
இனி யாருக்கும் இதுபோல் நடக்கக்கூடாது என்பதை உறுதிசெய்யவேண்டும் என்று கோரி அவர்கள் அளித்துள்ள புகாரில் 6,000 பொதுமக்கள் கையெழுத்திட்டுள்ளார்கள்.