முறைகேடு குற்றச்சாட்டினால் தப்பியோட்டம்! நாடு திரும்பியதும் சிறை..விடுதலையாகும் முன்னாள் பிரதமர்

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா நாளை சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

முறைகேடு குற்றச்சாட்டு
2001ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை தாய்லாந்தின் பிரதமராக இருந்த காலத்தில் தக்சின் ஷினவத்ரா (Thaksin Shinawatra), ஆட்சிக்காலத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சிறை செல்வோம் என பயந்து தக்சின் ஷினவத்ரா (74) வெளிநாட்டில் தஞ்சமடைந்தார். ஆனால் அவர் மீண்டும் நாடு திரும்பியதும் கைது செய்யப்பட்டு, கடந்த ஆண்டு ஆகத்து மாதம் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

விடுதலை அறிவிப்பு
ஆனால், தாய்லாந்து மன்னர் Maha Vajiralongkorn அவரது சிறை தண்டனையை ஓராண்டாக குறைத்தார்

இதற்கிடையில் தக்சின் உடல்நலக்குறைவு காரணமாக பாங்காக் சிறையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் தற்போதைய தாய்லாந்தின் பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் (Srettha Thavisin), நாளை தக்சின் ஷினவத்ரா விடுதலை செய்யப்படுவார் என அறிவித்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *