கணவர் வீட்டில் ஏத்துக்கல.. ரோஜா சீரியல் பிரியங்கா விவாகரத்துக்கு இதுதான் காரணமா

சன் டிவியின் ரோஜா சீரியல் ஹீரோயினாக நடித்து பாப்புலர் ஆனவர் பிரியங்கா நல்காரி. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நடிகையான அவர் தமிழ்நாட்டில் பெரிய அளவு ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிறார்.

ரோஜா சீரியல் மிகப்பெரிய ஹிட் ஆனது என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த தொடர் ஆரம்பிக்கும் முன்பு அவர் மலேசியாவை சேர்ந்த தொழிலதிபர் ராகுல் வர்மா என்பவரை காதல் செய்து வந்தார். அவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்திருந்தது. ஆனால் திருமணம் நடக்காமல் நின்றுபோனது.

ரோஜா சீரியல் முடிந்த பிறகு ஜீ தமிழில் சீதா ராமன் என்ற புது தொடரில் பிரியங்கா நல்காரர் நடிக்க தொடங்கினார். அந்த நேரத்தில் திடீரென மலேசியாவில் அவரது திருமணம் நடந்து முடிந்தது. அதில் அவரது பெற்றோர் கூட கலந்து கொள்ளவில்லை. திருமணம் முடிந்து ஓராண்டு கூட முடியாத நிலையில் தற்போது அவர்கள் பரிந்து விட்டதாக செய்தி கடந்து வாரம் முதல் பரவிக் கொண்டிருக்கிறது.

பிரிவுக்கு இதுதான் காரணம்
இதற்கு முன் பிரியங்கா நல்காரி அளித்த ஒரு பேட்டியில் தங்கள் திருமணத்திற்கு பெற்றோர் வராததற்கு காரணம் பாஸ்போர்ட் பிரச்சனை மட்டும்தான் எனக் கூறியிருக்கிறார். ஆனால் அதே நேரத்தில் மாப்பிள்ளை வீட்டில் இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் கூறியிருக்கிறார்.

இதுதான் தற்போது அவர்கள் பிரிய முக்கிய காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது.

பிரியங்கா நல்காரி தற்போது நளதமயந்தி என்ற புது சீரியல் நடித்து வருகிறார். காதலர் தினத்தன்று கூட அவர் தனியாகத்தான் வீடியோ வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது அதனால் அவர் கணவரை பிரிந்தது உறுதி ஆகியிருக்கிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *