பழைய படத் தலைப்புகளில் சிவகார்த்திகேயனின் 6வது படம் ‘அமரன்’
அத்தலைப்பில் ஏற்கெனவே ஒரு படம் வெளியாகி உள்ளது. பழைய படத் தலைப்புகளை வேறு எந்த நடிகர்களைக் காட்டிலும் அதிகமாகப் பயன்படுத்துவது சிவகார்த்திகேயன் படத்திற்காகத்தான் இருக்கும்.அமரன்சிவகார்த்திகேயனின் 21வது படமாக இந்த 2024ம் ஆண்டில் இப்படம் வெளியாக உள்ளது. இதற்கு முன்பு 1992ம் ஆண்டில் கே ராஜேஷ்வர் இயக்கத்தில் கார்த்திக், பானுப்ரியா நடிப்பில் இதே பெயரில் ஒரு படம் வெளிவந்துள்ளது. அப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், ஆதித்யன் இசையில் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அப்போது மிகவும் பிரபலம்.
கார்த்திக் பாடிய ‘வெத்தல போட்ட ஷோக்குல,’ மறைந்த நடிகை ஸ்ரீவித்யா பாடிய ‘டிரிங் டிரிங்’ உள்ளிட்ட பாடல்கள் சூப்பர் ஹிட்டானவை.மாவீரன்சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம். மடோன் அஷ்வின் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்திருந்தார். வசூல் ரீதியாக வெற்றி பெற்ற படம். இதற்கு முன்பு 1986ல் ராஜசேகர் இயக்கத்தில், ரஜினிகாந்த், அம்பிகா மற்றும் பலர் நடிப்பில் இதே பெயரில் ஒரு படம் வந்துள்ளது.
ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடித்த ‘மர்த்’ படத்தின் ரீமேக்தான் அப்படம். அந்தக் கால ‘மாவீரன்’ படம் தமிழின் முதல் 70 எம்எம் படமாக அமைந்தது. வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை.வேலைக்காரன்சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் நடிக்க மோகன்ராஜா இயக்கத்தில் 2017ல் வெளிவந்த படம் ‘வேலைக்காரன்’. கருத்தியலான படமாக இருந்தாலும் கமர்ஷியல் ரீதியாக இப்படம் வெற்றி பெறவில்லை.
இதே பெயரில் ரஜினிகாந்த், அமலா நடிக்க எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் 1987ல் வெளியான படம் பெரும் வெற்றியைப் பெற்றது. இளையராஜாவின் இசையில் அப்படத்தின் பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்டானவை.ஹீரோசிவகார்த்திகேயன் நடிப்பில், பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் 2019ம் ஆண்டில் வெளிவந்த படம் ‘ஹீரோ’. இப்படத்தில் அர்ஜுன், கல்யாணி பிரியதர்ஷன், இவானா நடித்தார்கள். இதே பெயரில் ஏ ஜெகன்னாதன் இயக்கத்தில், மரகதமணி இசையமைப்பில், ரகுமான், சுகன்யா நடித்து ஒரு படம் வெளிவந்துள்ளது.