Nithya menen: ஆம்பளைங்க ரொம்ப பாவம்: அழறது பெண்களின் வலிமை… வருத்தப்பட்ட நித்யா மேனன்!
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வருபவர் நடிகை நித்யா மேனன்.
யதார்த்தமான நடிப்பு, அழகான சிறப்பு, துறுதுறுப்பான பார்வை, காந்த விழிகளால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றவர் நடிகை நித்யா மேனன்.
தென்னிந்திய சினிமா மட்டுமின்றி அக்சய் குமார் நடிப்பில் வெளியான ‘மிஷன் மங்கள்’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து விஷால் ரஞ்சன் மிஸ்ரா இயக்கத்தில் ‘மர்டர் மிஸ்டரி’ என்ற படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார்.
பிஸி ஷெட்யூல் :
காஞ்சனா 2, வெப்பம், 24, ஓ காதல் கண்மணி, இருமுகன், மெர்சல், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார் நித்யா மேனன். தற்போது பல மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் அவர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி ஜோடியாக காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து வருகிறார்.
ஆண்கள் பாவம் :
அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் பெண்களின் அழுகை குறித்து நித்யா மேனன் பேசி இருந்தார். ‘பெண்கள் அழுவது என்பது அவர்களின் வீக்னஸா அல்லது வீரமா? அதைப் பற்றிய அவரின் கருத்து என்ன?’ எனக் கேட்கப்பட்டது. அதற்கு நித்யா மீனின் பதிலளிக்கையில் அழுவது நிச்சயமா பெண்களுக்கு ஒரு ஸ்ட்ரென்த் தான். நானும் அப்படித்தான். ஆண்களை நினைத்தால் எனக்கு பரிதாபமாக இருக்கிறது. பாவம் அவர்களால் அழ முடியாது, அழுவது ரொம்ப கஷ்டம். சிறு வயது முதல் ஆம்பள பசங்க அழக்கூடாது என சொல்லி சொல்லி வளர்க்கப்படுகிறார்கள். அவர்களை மிகவும் பாவம்.