பர்த்மார்க் சாதாரண விஷயம் கிடையாது: இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன்!

யக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் இயக்கியுள்ள பர்த்மார்க் படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

சார்பட்ட பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ஷபீர்.

ரஜினியின் ஜெயிலர் படத்தில் மருமகளாக நடித்து பிரபலமனாவர் நடிகை மிர்னா. இவர்கள் இணைந்து நடித்துள்ள படம் ‘பர்த்மார்க்’.

ஸ்ரீராம் சிவராமன், விக்ரமன் ஸ்ரீதரன் இணைத் தயாரிப்பில், விக்ரம் ஸ்ரீதரன் இயக்கத்தில் ஷபீர் கல்லாரக்கல், மிர்னா நடிப்பில் உருவாகி இருக்கும் இப்படம் ஜெனி என்ற மிர்னா கதாபாத்திரத்தைச் சுற்றி நகரக்கூடிய கதை. படத்தில் ஏழு மாத கர்ப்பிணியாக மிர்னா நடித்துள்ளார். படப்பிடிப்பு 36 நாட்கள் நடந்துள்ளது. இதில் தீப்தி, இந்திரஜித், பொற்கொடி, பி.ஆர்.வரலகட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர்.

படம் குறித்து இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் கூறியிருப்பதாவது: ‘பர்த் மார்க்’ நிச்சயம் புது அனுபவம் உங்களுக்குக் கொடுக்கும். நம் வாழ்விலும் ‘பர்த் மார்க்’ என்பது சாதாரண விஷயம் கிடையாது. இதுவரை பார்த்துச் சலித்த கதைகளைப் போல இல்லாமல் புதிதாக எதாவது ஒன்று செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அப்போது தான் சுகப்பிரசவம் பற்றி விக்ரம் ஒரு விசயத்தைக் கூறினார். அதைப்பற்றி ும்போது நிறைய சுவாரஸ்யமான விசயங்கள் தெரிய வந்தது. இயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இது பற்றி விரிவாகப் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருந்ததால் படமாக எடுத்துள்ளோம். இந்தப் படம் 1990 களில் நடக்கிறது. கார்கில் போருக்குப் பிறகு வீட்டுக்குத் திரும்பிய டேனி என்ற இராணுவ வீரர், கர்ப்பமாக இருக்கும் தன் மனைவியை தன்வந்திரி என்கிற கிராமத்துக்கு அழைத்துச் செல்கிறார். எந்தவிதமான சிக்கல்கள் மற்றும் அறுவை சிகிச்சைகள் இல்லாமல் இயற்கையான பிரசவத்திற்குப் பெயர்போன இடம் அந்த கிராமம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *