கட்சி பெயரை மாற்றுகிறாரா விஜய்..?
நடிகர் விஜய் சமீபத்தில் தனது அரசியல் வருகையை அறிவித்தார்.மேலும் அவர் “தமிழக வெற்றி கழகம்” என்ற அரசியல் கட்சியை தொடங்கி இருப்பதாக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார்.
2026 தான் தங்கள் இலக்கு என்றும் தெரிவித்திருந்தார். அதற்காக அவர் ‘தளபதி 69’ படத்துடன் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு முழு நேர அரசியலில் குதிக்க இருப்பதாகவும் அறிவித்தார்.
இந்த நிலையில் கட்சி பெயரில் “தமிழக வெற்றி(க்) கழகம்” இலக்கணப்பிழை இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில், விமர்சனங்களை ஏற்றுக்கொள்வதுதான் கட்சிக்கு அழகு எனக்கூறி கட்சியின் பெயரில் மாற்றம் செய்ய விஜய் ஒப்புதல் அளித்துள்ளாராம்.
இதற்காக இன்று டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளார். விரைவில் பெயர் மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.