#BREAKING : தங்கல் பட நடிகை காலமானார்..!
நடிகர் அமீர் கான், ஃபாத்திமா சனா, சான்யா மல்ஹோத்ரா, ஷாக்ஷி தன்வர் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான தங்கல் படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை ஈட்டியது.
மல்யுத்த போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம், வரலாறு காணாத வகையில் வசூல் சாதனை படைத்தது.
மல்யுத்த போட்டியில் தன்னால் சாதிக்க முடியாததை தன் மகள்கள் மூலம் சாதிக்க நினைக்கும் ஒரு தந்தைக்கும் அவரின் மகள்களுக்கும் இடையே நடக்கும் போராட்டம்தான் “தங்கல்”.
இந்த படத்தில் பபிதா போகத்தின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சுஹானி பட்நாகர் (19) மரணமடைந்தார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். சிறிது காலத்திற்கு முன்பு அவரது கால் முறிந்தது. சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. இதனால், அவரது உடலில் நீர் கோர்த்து இருந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
19 வயதில் நடிகை உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.