Sivakarthikeyan: விஜய்க்கு சொன்ன கதையில் நடிக்கும் சிவகார்த்திகேயன்.. ஏஆர் முருகதாஸ் பிளான் இதுதான்!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய அடுத்தடுத்த படங்களால் ஏராளமான ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில் கடந்த ஆண்டு இவருக்கு சிறப்பாக அமைந்தது. மாவீரன் என்ற படத்தை கொடுத்திருந்தார்.
இந்த படம் 100 கோடி ரூபாய் வசூலை நெருங்கி சாதனை புரிந்தது. இந்த படத்தை அடுத்து இந்த ஆண்டில் ஜனவரி மாதத்திலேயே சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படம் வெளியானது. நீண்ட காலங்களாக சிஜி வேலைகள் உள்ளிட்டவற்றால் இந்த படத்தில் ரிலீஸ் தாமதமான நிலையில் இந்த படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துள்ளது.. அடுத்தடுத்து இரு படங்களின் வெற்றிகளால் தற்போது அவர் உற்சாகமாகியுள்ளார்.
தற்போது கமல்ஹாசனின் தயாரிப்பில் உருவாகி வரும் எஸ்கே 21 படத்தின் ஷூட்டிங்கையும் நிறைவு செய்ய உள்ளார் சிவகார்த்திகேயன். இன்றைய தினம் சிவகார்த்திகேயனின் பிறந்த தினத்தையொட்டி நேற்று மாலை இந்த படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியிடப்பட்டது. படத்திற்கு அமரன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் வெளியான டீசரும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். அவருக்கு சாய் பல்லவி ஜோடியாகியுள்ளார்.