Nayanthara – Kavin: நயன்தாரா ஜோடியாகும் டாடா கவின்? கைகோர்க்கும் வெற்றிமாறன்: எந்தப் படம் தெரியுமா?

ஸ்டார் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் கவின் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

 

கவின்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் அறிமுகமான கவின், தற்போது தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராக உருவாகியுள்ளார். கடந்த ஆண்டு வெளியான டாடா படம் அவருக்கு பெரிய வரவேற்பைக் கொடுத்த நிலையில், தற்போது அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அவருக்கு அமைந்து வருகின்றன.

ஸ்டார்

‘பியார் பிரேம காதல்’ படத்தை இயக்கிய இளன் இயக்கும் ஸ்டார் படத்தில் தற்போது கவின் நடித்து வருகிறார். அதிதி எஸ்.போஹன்கர் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் இதற்கு முன்பாக ‘சிவாஜி கணேசனும் சுருளி நாச்சியாரும்’ என்கிற படத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில், பி.வி.எஸ்.என் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளார்கள். ஸ்டார் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 16ஆம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டது.

கவின் நடித்து வரும் படங்கள்

ஸ்டார் படத்தைத் தொடர்ந்து, கவின் நெல்சன் திலிப்குமார் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். அறிமுக இயக்குநர் சிவபாலன் இந்தப் படத்தை இயக்குகிறார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும், பிரியங்கா மோகன் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *