அட்ஜஸ்ட்மென்ட் பற்றி ஓவியா! உண்மையை வெளிச்சம் போட்டு காட்டிய பயில்வான் ரங்கநாதன்?
சினிமா துறையில் பெரிதாக நடிகைகள் தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று அட்ஜஸ்ட்மென்ட். சில தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் தங்களிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் தான் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறியதாக பல நடிகைகள் வெளிப்படையாக பேசுவதை நாம் பார்த்திருக்கிறோம்.
குறிப்பாக அப்படி தங்களுக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் விஷயங்களை பற்றி பிரபலங்கள் பேசுவது சஜகமாகி விட்டது என்றே சொல்லலாம்.
குறிப்பாக நடிகை ஜீவிதா, ஷகீலா, ஷர்மீலா, விசித்ரா உள்ளிட்ட பல பிரபலங்களும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசி இருந்தார்கள். அந்த வகையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான நடிகை ஓவியா அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசியதாக நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன் ” அட்ஜஸ்ட்மென்ட் பற்றி ஓவியாவிடம் கேட்டதற்கு அவர் கூறியது என்னவென்றால் சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் இன்னுமே இருக்கத்தான் செய்கிறது. அந்த பிரச்சனை இன்னுமே ஓய்ந்த பாடு இல்லை. இந்த விஷயத்தை பற்றி எவ்வளவோ முறை கண்டனம் தெரிவித்து பேசினாலும் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டு கொண்டு தான் இருக்கிறார்கள். இதனை வாய்ப்பு தேடி வரும் ஆர்வம் கோளாறு உள்ள பெண்கள் சகித்து கொள்கிறார்கள்.
சில இந்த மாதிரியான விஷயங்களை வெளியே சொல்லாமல் வருத்தத்தில் மனதிற்குள்ளே வைத்து கொள்கிறார்கள். உங்களுக்கு அட்ஜஸ்ட்மென்ட் பற்றிய பிரச்சனை வரும்போது அதற்கு எதிராக மறுப்பு சொல்லுங்கள். அப்படி எதிர்ப்பு தெரிவிப்பதால் சினிமா வாய்ப்பு கிடைக்காது என்று நினைக்கவேண்டாம். அப்படி சினிமா வாய்ப்பை பற்றி உங்களுக்கு கவலை இல்லை என்றால் தைரியமாக எதிர்ப்பு தெரிவிங்கள்.