முருகதாஸ் இயக்கத்தில். உடல் மொழிக்காக சிறப்புப் பயிற்சி சிவகார்த்திகேயன்

.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.

 

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ஸ்ரீ லக்ஷ்மி மூவீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.அனிருத் இசையமைக்கிறார்.சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார்.

ஒளிப்பதிவு சுதீப் எலமான் செய்கிறார்.முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் இதுவரை கண்டிராத கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடிக்கிறார்.“கஜினி மாதிரியே பரபரப்பான ஆக்‌ஷன் படம். காதலுக்கும் முக்கியத்துவம் இருக்கும். நான் எழுதிய இயல்பான ஹீரோயின் ரோலுக்கு ருக்மணி வசந்த் கச்சிதமாக இருந்தார்.

அவர் நடித்த கன்னடப் படங்களைப் பார்த்துதான் தேர்வு செய்தோம். சிவகார்த்திகேயன் உடல் மொழிக்காக சிறப்புப் பயிற்சி எடுக்கப் போகிறார் என்றார் ஏ.ஆர்.முருகதாஸ்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *