மீண்டும் கிடுகிடுவென உயரும் தங்கம் விலை… நகைப் பிரியர்கள் ஷாக்!
Gold Rate:இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது.
இதனிடையே, இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக டிசம்பர் மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இன்றைய தங்கம் விலை
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ஒரு சவரன் ரூ. 46,640-க்கும், கிராமுக்கு ரூ.9 குறைந்து ஒரு கிராம் ரூ.5,830-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமையும், நேற்று திங்கள் கிழமையும், தங்கம் விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்தது. மறுநாள், புதன்கிழமையும் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 அதிரடியாக குறைந்தது. இதேபோல், வியாழக்கிழமையும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்தது. ஆனால், நேற்று வெள்ளிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 45,080-க்கும், கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,760-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், தங்கம் விலை இன்றும் அதிரடியாக அதிகரித்துள்ளது. இதனால் நகைப் பிரியர்களும், இல்லத்தரசிகளும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 45,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,780-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,305-க்கும், ஒரு சவரன் ரூ. 50,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.