Rahu Ketu: ராகு கேது அதிர்ஷ்ட யோகம் தொடங்கியாச்சு.. ராஜராசிகள் இவர்கள்தான்
நவகிரகங்களில் நிழல் கிரகங்களாக விளங்க கூடியவர்கள் ராகு மற்றும் கேது. சனிபகவானுக்குப் பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக இவர்கள் விளங்கி வருகின்றனர். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இவர்கள் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர்.
அதன் காரணமாக இவர்களை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். ராகு பகவான் மீன ராசியிலும், கேதுபகவான் கன்னி ராசிகளும் தற்போது பயணம் செய்து வருகின்றனர். ஒரு 2025 வரை இதே ராசியில் பயணம் செய்ய உள்ளனர்.
இந்த இரண்டு கிரகங்களின் பார்வையால் வரும் 2024 ஆம் ஆண்டு சில ராசிகள் நல்ல பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.
தனுசு ராசி
ராகு மற்றும் கேது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றன. வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பெற்றோரின் உடல்நலத்தில் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் இடமாற்றம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பொறுமையாக இருந்தால் செலவுகளை குறைக்கலாம். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஆலய வழிபாடு மிகவும் அவசியமாகும்.
மகர ராசி
ராகு மற்றும் கேது உங்களுக்கு நல்ல பலன்களை அள்ளித் தரப் போகின்றனர். அனைத்து விதமான செல்வங்களும் மகிழ்ச்சியும் கிடைக்கும். தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். எடுத்த காரியத்தில் முனைப்போடு செயல்பட வேண்டும். குரு பகவானால் உங்களுக்கு பணம் வரவில்லை எந்த குறையும். இருக்காது காதல் வாழ்க்கை சற்று மந்தமாக இருக்கும். பணவரவில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும்.
கும்ப ராசி
சனிபகவான் தற்போது 30 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் ராசியில் பயணம் செய்து வருகிறார். ராகு கேது உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கப் போகின்றனர். வார்த்தைகளில் கடுமை காட்டுவதை தவிர்க்க வேண்டும். பணவரவில் இருந்து குறையும் இருக்காது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வாக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். சேமிப்பு அதிகரிக்கும். செலவுகள் குறையும்.