யுவராஜ் சிங் வீட்டில் நகை பணம் திருடப்பட்டதாக புகார்! போலீஸார் வழக்குப்பதிவு!
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தாயார் வீடு பஞ்சாபில் உள்ள பஞ்ச்குலா நகரின் MDC செக்டார் 4ல் உள்ளது.
அந்த வீட்டில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக ரூ.75,000 பணம், நகைகள் திருடு போனதாக காவல்நிலையத்தில் புகாரளிக்கப்படுள்ளது. யுவராஜ் சிங்கின் தாயார் அளித்த புகாரின் பேரில் பணம், நகைகள் சம்பந்தப்பட்ட திருட்டு வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
ரூ.75,000 மதிப்புள்ள நகை திருட்டு! என்ன நடந்தது?
இந்தியா டுடே வெளியிட்டிருக்கும் செய்தியின்படி, “யுவராஜ் சிங்கின் தாயார் ஷப்னம் சிங், கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் முதல் குர்கானில் உள்ள அவர்களது மற்றொரு வீட்டில் தங்கியிருந்ததாக தெரிவித்தார். பின்னர் அக்டோபர் 5, 2023 அன்று பஞ்ச்குலாவில் உள்ள MDC வீட்டிற்குத் திரும்பியபோது, முதல்மாடியில் உள்ள அறையின் அலமாரியில் இருந்து தோராயமாக ரூ.75,000 மதிப்புள்ள நகைகள் மற்றும் பிற பொருட்கள் திருடப்பட்டிருப்பதை முதலில் கண்டுபிடித்தார்.
இந்த விஷயத்தை தனிப்பட்ட முறையில் விசாரிக்க நினைத்த யுவராஜ் சிங்கின் தாயார், எவ்வளவு முயற்சி செய்த போதிலும் எந்த தடயங்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை. நகை பொருட்கள் திருடுபோன விசயத்தில் வீட்டு பராமரிப்புப் பணியாளர், சகேதியைச் சேர்ந்த லலிதா தேவி மற்றும் பீகாரைச் சேர்ந்த சமையல்காரர் சில்தார் பால் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.”