முன்னாள் கேப்டன் நினைவாக கருப்புப் பட்டை அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள்!
இந்திய அணியின் வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீரராக அறியப்பட்ட தத்தாஜிராவ் கெய்க்வாட் (வயது 95) அண்மையில் காலமானார். அவரது மறைவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், மறைந்த தத்தாஜிராவ் கெய்க்வாட்டின் நினைவாக இந்திய வீரர்கள் கைகளில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடுகின்றனர்.
தத்தாஜிராவ் இந்திய அணிக்காக 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும், 1959 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியை அவர் வழிநடத்தியது குறிப்பிடத்தக்கது.