Today Rasipalan (28.12.2023): சாதகமா? பாதகமா?.. 12 ராசிகளுக்கான உரிய பலன்கள் இதோ!
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு உண்டான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
மேஷம்
புதிய முயற்சிகளில் மாற்றமான சூழல் அமையும். பணவரவு தாரளமாக இருக்கும். முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். திடீர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். மனதளவில் தன்னம்பிக்கை பிறக்கும்.
ரிஷபம்
உறவினர்களால் ஆதாயம் ஆடைவீர்கள். சக ஊழியர்களிடத்தில் மதிப்பு மேம்படும். பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் வரவு மேம்படும். எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்
சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நண்பர்களை பற்றிய புரிதல் உண்டாகும். சமூகம் தொடர்பான கண்ணோட்டம் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். மற்றவர்கள் கூறும் கருத்துகளில் இருக்கக்கூடிய உண்மை நிலைகளை அறிந்து முடிவெடுப்பது சாலச் சிறந்தது.
கடகம்
பணிபுரியும் இடத்தில் புதுவிதமான சூழ்நிலைகள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சமூகப் பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள்.
சிம்மம்
புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வெளியூர் தொடர்பான பயணம் கைகூடும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அரசு பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். தந்தை வழி உறவுகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும்.
கன்னி
எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். உறவினர்களால் ஆதரவான சூழல் அமையும். பயணம் சார்ந்த வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார சிந்தனைகள் மேம்படும். நண்பர்கள் பற்றிய புரிதல் மேம்படும். மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.
துலாம்
நினைத்த பணிகள் கைகூடிவரும். புதிய நண்பர்களால் உற்சாகம் ஏற்படும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் திடீர் திருப்பம் உண்டாகும். வியாபாரத்தில் ஒத்துழைப்பு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் திருப்தியான சூழல் ஏற்படும்.
விருச்சிகம்
எதிலும் நேர்மையுடன் செயல்படவும். மனை விற்பனையில் மந்தமான சூழல் ஏற்படும். வர்த்தகத்தில் கவனம் வேண்டும். நட்பு வட்டாரங்களில் புதிய அனுபவம் உண்டாகும். மற்றவர்களின் குறைகளை பெரிதுப்படுத்துவதை குறைத்துக் கொள்ளவும். மனதில் இனம் புரியாத குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.
தனுசு
சகோதரர்களின் வழியில் ஒற்றுமை ஏற்படும். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் ஏற்படும். எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும்.
மகரம்
குடும்பத்தில் மதிப்பு மேம்படும். உயர் அதிகாரிகளுடனான நட்பு மேம்படும். நெருக்கமானவர்களுக்காக சில பணிகளை மேற்கொள்வீர்கள். கடன் பிரச்னைகள் குறையும். வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடும்.
கும்பம்
பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். திறமைகளை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். பூர்வீக சொத்துக்கள் பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.
மீனம்
நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். சில விஷயங்களை போராடி மேற்கொள்வீர்கள். கலைப்பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்களால் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில் சாதகமான சூழல் உண்டாகும்.