நீங்க ஐபோன் யூஸ் பண்றீங்களா..? இப்படி ஒரு கருவி இருக்குறது உங்களுக்கு தெரியுமா?
உங்களது ஐபோன் சிறப்பான முறையில் செயல்படவும், நீடித்து உடைப்பதற்கும் ஐபோனில் இருக்கக்கூடிய பேட்டரியின் ஆரோக்கியம் மிகவும் அவசியமானது. நாளாக நாளாக பேட்டரிகளின் தரம் குறைந்து, அது சாதனத்தின் ஒட்டுமொத்த செயல்திறனை பாதிக்கலாம். ஆனால் அதிர்ஷ்டவசமாக ஆப்பிள் நிறுவனம் உங்களுடைய ஐபோனில் பேட்டரி ஆரோக்கியத்தை கண்காணிப்பதற்கும், அளவிடுவதற்கும் ஒரு சில கருவிகளை வழங்குகிறது.
வழக்கமான முறையில் உங்களது ஐபோன் பேட்டரி ஆரோக்கியத்தை கவனிப்பது மற்றும் நல்ல சார்ஜிங் பழக்கங்களை கொண்டிருப்பதன் மூலமாக உங்கள் சாதனம் நீடித்து உழைப்பதை நீங்கள் உறுதி செய்யலாம். உங்கள் ஐபோனின் பேட்டரி ஆரோக்கியத்தை சரி பார்ப்பதற்கு ஆப்பிள் நிறுவனம் வழங்கும் ஐந்து எளிய வழிகள் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
செட்டிங்ஸ் அப்ளிகேஷன்
1. உங்களது ஐபோனில் உள்ள “Settings” அப்ளிகேஷனை திறக்கவும்.
2. கீழே ஸ்க்ரோல் செய்து “Battery” என்பதை தட்டவும். “Battery Health” என்பதை தேர்வு செய்யுங்கள்.
3. உங்களது பேட்டரியின் அதிகப்பட்ச திறன் மற்றும் அதன் அதிகப்பட்ச செயல்திறன் போன்ற முக்கியமான விவரங்களை இங்கு காண்பீர்கள்.
4. பேட்டரி பயன்பாடு குறித்த விவரங்கள்
5. உங்கள் ஐபோனில் “Settings” ஆப்ஷனில் உள்ள “Battery” என்பதை தேர்வு செய்யவும். உங்களுடைய பேட்டரி பயன்பாட்டை ஆய்வு செய்யுங்கள். ஏதேனும் ஒரு அப்ளிகேஷன் உங்களது பேட்டரியை வழக்கத்திற்கு மாறாக அதிகமாக பயன்படுத்தி வந்தால் அது ஒரு பிரச்சனையை குறிக்கிறது. குறிப்பிட்ட அந்த அப்ளிகேஷனை அப்டேட் செய்யலாம் அல்லது பேக்ரவுண்ட் ஆக்டிவிட்டியை சரி பார்க்கலாம்.
CoconutBattery (Mac-ற்கு)
1. ஒருவேளை உங்களிடம் மேக் இருந்தால் நீங்கள் CoconutBattery அப்ளிகேஷனை பயன்படுத்தலாம்.
2. உங்களது ஐபோனை மேக் உடன் இணைத்து CoconutBattery அப்ளிகேஷனை முயற்சித்துப் பாருங்கள்.
3. இந்த அப்ளிகேஷன் உங்கள் ஐபோனின் பேட்டரி ஆரோக்கியம் குறித்த விரிவான தகவலை வழங்கும்.
தேர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்கள்
1. பேட்டரியின் ஆரோக்கியத்தை கண்காணிப்பதற்கு ஆப் ஸ்டோரில் பல்வேறு விதமான தேர்டு பார்ட்டி அப்ளிகேஷன்கள் உள்ளன. உங்களது பேட்டரியின் நிலை குறித்த விரிவான தகவலை வழங்கக்கூடிய நல்ல அப்ளிகேஷன்களை தேர்வு செய்யுங்கள். நம்பகமான அப்ளிகேஷன்களை மட்டுமே பயன்படுத்தவும்.
iCloud பேட்டரி பயன்பாடு
1. இணைக்கப்பட்டுள்ள அனைத்து சாதனங்களின் பேட்டரி பயன்பாட்டை பார்ப்பதற்கு உதவக்கூடிய அம்சமே iCloud. “Settings” ஆப்ஷனை கிளிக் செய்து, Apple ID ஐ தேர்வு செய்யவும். இங்கு “iCloud” ஆப்ஷனுக்கு செல்லுங்கள். இங்கே உங்கள் ஐபோனின் பேட்டரி சதவீதம் மற்றும் பிற இணைக்கப்பட்ட சாதனங்களை காண்பீர்கள்.
பேட்டரி ஆரோக்கியம்
1. அதிகப்படியான வெப்பநிலைகளை தவிர்க்கவும்:
2. அதிகப்படியான வெப்பம் அல்லது குளிர் போன்றவை உங்கள் பேட்டரியின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கலாம். எனவே பரிந்துரைக்கப்பட்ட வெப்ப நிலையில் உங்களது ஐபோனை பயன்படுத்துங்கள்.
செட்டிங்ஸை மேம்படுத்தவும்
1. பிரைட்னஸ், பேக்ரவுண்ட் அப்ளிகேஷன், ரெஃப்ரெஷ் மற்றும் புஷ் நோட்டிபிகேஷன்கள் போன்ற செட்டிங்ஸை மாற்றியமைப்பதன் மூலமாக உங்கள் பேட்டரி நீடித்து உழைப்பதை நீங்கள் உறுதி செய்யலாம்.
2. சாஃப்ட்வேர் அப்டேட்: உங்களது ஐபோன் லேட்டஸ்ட் iOS வெர்ஷனில் இயங்குவதை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
3. அளவுக்கு அதிகமாக சார்ஜ் செய்வதை தவிர்க்கவும்:
4. நீண்ட நேரத்திற்கு உங்களது ஐபோனை சார்ஜ் செய்வது பேட்டரியின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும்.