சிறந்த மூன்று மாத நிலையான முதலீடு திட்டங்கள் எவை..? அவற்றின் வட்டி விகிதம் என்ன?
நல்ல திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும், ஆனால் சந்தை அபாயங்கள் இருக்கக் கூடாது என்று சேமிக்க நினைக்கும் நபர்களுக்கு தான் இந்த செய்தி. வங்கிகள் பல விதமான வட்டி விகிதங்களில் நிலையான வைப்புநிதித் திட்டங்களைக் (ஃபிக்சட் டெபாசிட்) கொண்டுள்ளன. இதில் பயனர்கள் தங்கள் வசதிக்கேற்ப வங்கிகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யலாம்.
நிலையான வைப்புநிதி திட்டம் என்றால், ஒருமுறை முதலீடு செய்யும் திட்டம் ஆகும். உங்களிடம் சேமிக்க வைத்திருக்கும் பணத்தை இதில் டெபாசிட் செய்து வட்டி வருவாயை ஈட்ட முடியும். தற்போது இந்தியாவில் உள்ள பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகள் வைத்திருக்கும் இந்த நிலையான வைப்புநிதி திட்டங்களின் வட்டி விகிதங்களை விரிவாகப் பார்க்கலாம். அதுவும் மூன்று வருட வைப்புநிதிக்கான திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம். இந்த விவரங்கள் பிப்ரவரி 5, 2024 அடிப்படையில் எடுக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பரோடா வங்கி (Bank of Baroda)
பொதுத்துறை வங்கியான பரோடாவில் 3 வருட நிலையான வைப்புநிதியில் முதலீடு செய்தால் 7.25 விழுக்காடு வட்டி வருவாயை வழங்குகிறது. அதாவது மூன்று வருடத்திற்காக ஒருமுறை ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், முதிர்வு காலத்தில் அதன் மதிப்பு 1.24 லட்ச ரூபாய் ஆக இருக்கும்.
ஆக்சிஸ் வங்கி (Axis Bank)
தனியார் ஆக்சிஸ் வங்கியில் 3 வருட நிலையான வைப்புநிதியில் முதலீடு செய்தால் 7.10 விழுக்காடு வட்டி கிடைக்கும். அதாவது மூன்று வருடத்திற்காக ஒருமுறை ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், முதிர்வு காலத்தில் அதன் மதிப்பு 1.24 லட்ச ரூபாய் ஆக இருக்கும்.
எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி
இந்த மூன்று வங்கிகளும் 3 வருட நிலையான வைப்புநிதி முதலீடு திட்டத்திற்கு 7.10 விழுக்காடு வட்டி வருவாயை வழங்குகிறது. நீங்கள் மூன்று வருடத்திற்காக ஒருமுறை ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், முதிர்வு காலத்தில் அதன் மதிப்பு 1.23 லட்ச ரூபாய் ஆக இருக்கும்.
கனரா வங்கி
மூன்று வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு கனரா வங்கி 6.80% வட்டி வருவாயை வழங்குகிறது. ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், முதிர்வு காலமான மூன்று வருடத்தில் இதன் மதிப்பு ரூ.1.22 லட்சமாக இருக்கும்.
பாரத ஸ்டேட் வங்கி (ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா)
நாட்டின் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் இந்த திட்டத்திற்கான வட்டி 6.75% ஆக உள்ளது. இதில் மேற்கொள்ளும் ஒரு லட்ச ரூபாய் முதலீட்டிற்கு ரூ.1.22 லட்சம் கிடைக்கும்.
பேங்க் ஆஃப் இந்தியா, யூனியன் வங்கி
இந்த வங்கிகளில் 3 வருட கால நிலையான சேமிப்புநிதித் திட்டத்திற்கு 6.50% வட்டி வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக மேற்கொள்ளும் ரூ.1 லட்சம் முதலீட்டிற்கு ரூ.1.21 லட்சத்தை முதிர்வுத் தொகையாகப்யூசர்கள் பெறுவார்கள்.
இந்தியன் வங்கி
இந்தியன் வங்கியில் 3 வருட நிலையான வைப்புநிதியில் முதலீடு செய்தால் 6.25 விழுக்காடு வட்டி கிடைக்கும். அதாவது மூன்று வருடத்திற்காக ஒருமுறை ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், முதிர்வு காலத்தில் அதன் மதிப்பு 1.20 லட்ச ரூபாய் ஆக இருக்கும்.