தமிழகத்தில் உள்ள பள்ளிகள், தர்காக்கள் புனரமைக்க வழங்கப்படும் மானியம் உயர்வு..!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் மேம்பாட்டிற்கு அரசு ஏகப்பட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் இன்னும் ஒரு சில இடங்களில் பள்ளி கட்டிடங்கள் மோசமான நிலையில் இருக்கின்றன. அந்த வகையில் பள்ளிகள், தர்காக்கள் புனரமைக்க தரப்படும் மானியம் ரூ. 10 கோடியாக உயர்த்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும் நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அது மட்டுமில்லாமல் சிறுபான்மையினர் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அடக்கஸ்தலம் இல்லாத சிறுபான்மையினருக்கு மாவட்ட தலைநகர்களில் இடம் ஒதுக்க அரசாணை வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.