தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பகிரங்க சவால் விட்ட துரை வைகோ..!

2026 சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறி வருகிறார்.

இந்நிலையில், அண்ணாமலை இவ்வாறு கூறி வருவது குறித்து மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோவிடம் நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து துரை வைகோ கூறுகையில், “அண்ணாமலை முதன்முதலில் அரசியலுக்கு வருகிற போது, அவரை சராசரி அரசியல்வாதியாக யாரும் பார்க்கவில்லை. ஐஐஎம்-ல் படித்தவர். ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர் என்பதால் அவர் மீது ஒரு நம்பிக்கை இருந்தது. ஆனால் போக போக, அண்ணாமலையின் பேச்சுகள், அவரது செயல்பாடுகள், அவர் கொடுக்கும் அறிக்கைகள் ஆகியவற்றை பார்க்கும் போது மிகவும் ஏமாற்றமாக தான் இருக்கிறது.

தவறான தகவல்களை கொடுப்பது; முரண்பாடான சில அறிக்கைகளை கொடுப்பது; முரண்பாடான அவரது செயல்பாடுகள் ஆகியவை மக்களுக்கு ஏமாற்றத்தை தான் கொடுத்திருக்கிறது. அது அவர் சார்ந்துள்ள பாஜகவையும் பாதிக்கும். நான் ஒன்னே ஒன்னு சொல்றேன். ஒரு சவால் விடுக்கிறேன். அண்ணாமலை தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் நின்று ஜெயிக்கட்டும். முதலில் அதை அவர் செய்யட்டும் பார்க்கலாம். முதலில் தேர்தலில் போட்டி போடட்டும். பெருசா சொல்றாருல. பாஜகவுக்கு தமிழகத்தில் எழுச்சி இருக்கு, கிளர்ச்சி இருக்குனு.. அப்போ தேர்தலில் அவர் நிற்க வேண்டியது தானே. அப்போ தான் தெரியும் என துரை வைகோ பேசினார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *